திருச்செந்தூர்: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள அணைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்காக சைக்கிளிலே பயணம் செய்து வருகை தந்து முருகனை வணங்குவார்கள். அதே போல் இந்த ஆண்டும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்காக அணைப்பட்டி கிராமத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் 33 ஆம் ஆண்டு பயணமாக கடந்த வியாழக்கிழமை கிளம்பியுள்ளனர்.
திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய தேனியில் இருந்து சைக்கிளில் வந்த 150 பக்தர்கள்! - TIRUCHENDUR
தேனியில் இருந்து 150 முருக பக்தர்கள் சைக்கிளில் வந்து திருச்செந்தூர் கோயிலில் முருகனை தரிசனம் செய்தனர்.
Published : Jan 20, 2025, 1:53 PM IST
இவர்கள், நான்காவது நாளான நேற்று மாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சைக்கிளிலேயே கோயில் வளாகப்பகுதிக்கு வருகை தந்தனர். பச்சை வண்ணத்தில் ஆடை அணிந்து சைக்கிளில் வந்த அவர்கள் சைக்கிளை கோயில் வளாகத்தில் நிறுத்தி விட்டு 150 பேரும் முருகனுக்கு "அரோகரா" என்ற கோஷத்துடன் கோயிலுக்குள் சென்று முருகனை தரிசனம் செய்தனர். ஒரே நேரத்தில் 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் பச்சை வண்ணத்தில் ஆடை அணிந்து சைக்கிளில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தந்ததால் திருச்செந்தூர் கோயில் வளாகம் முழுவதும் பச்சை வண்ணத்தில் காணப்பட்டது.