மேஷம்:உடல் நலன் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தற்போது நீங்கள் உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளீர்கள். எனினும், புதிதாக ஏதாவது ஒரு உணவை சுவைத்துப் பார்க்க விருப்பப்படலாம். பல நாட்களாக பார்க்காத நண்பர்களுடன் வெளியில் செல்லலாம்.
ரிஷபம்: நெருங்கிய நண்பர்கள் குறிப்பாக, எதிர்பாலினத்தைச் சேர்ந்த நண்பர்கள் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். திடீரென்று நீங்கள் காதல் வயப்பட்டுள்ளதை உணர்வீர்கள். காதல் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், அச்சம் ஏதுமின்றி அதைப் பயன்படுத்திக் கொள்ளவும். விரைவில் உங்களுக்கு திருமண உறவு கைகூடும்.
மிதுனம்: வீட்டில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் அதிகரிக்கும். அதை சமாளிக்க முடியாமல் நீங்கள், திணறும் வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் மனநிலை பாதிக்கப்படலாம். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிக்க வேண்டும்.
கடகம்:உங்கள் செயல்திறன் காரணமாக, நிதி நிலைமையை மேம்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் துறை ஆகிய இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், பணிகளும் வழங்கப்படும். மாலையில் விருப்பப்படி நேரத்தை செலவிடுவீர்கள்.
சிம்மம்:விற்பனைத்துறை மற்றும் மார்க்கெட்டிங் துறை தொடர்பான பணியில் இருப்பவர்கள், மேற்கொள்ளும் சந்திப்புகள் பலன் தரும். எனினும், பயணத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களிடமுள்ள திறமைகளை அறிந்துகொள்ள இது சரியான நேரமாகும். அடுத்த 2 முதல் 3 நாட்களில், உங்களது திறமையை நிரூபிப்பீர்கள்.
கன்னி:தினசரி பணிகளிலிருந்து விலகி, உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். சோர்வைத் தரும் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் பணிகளை மேற்கொள்ளவும். தனிப்பட்ட அல்லது சமூக அளவிலான சந்திப்புகளில் கலந்து கொள்ளக் கூடும். மற்றவர்களுடன் கலந்து பழகுவது, உற்சாகத்தைக் கொடுக்கும்.
துலாம்:குடும்பத்தின் மீதும், குடும்ப விவகாரங்களின் மீதும் கவனம் செலுத்துவீர்கள். வீட்டின் அலங்காரத்தை மாற்றி புதுப்பிக்க விருப்பம் இருக்கும். வீட்டிற்கான புதிய பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
விருச்சிகம்:நாம் எப்போதும், நமது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துகிறோம். இன்று அவ்வாறு இருக்க முடியாது. உடல் நல பாதிப்பு காரணமாக, உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்க வழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்யவும்.
தனுசு:எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தலைமைப் பண்புடன், உங்களின் கீழ் பணிபுரிபவர்கள் ஆலோசனைக்காக உங்களை அணுகினால், அவர்களை வழி நடத்துவீர்கள், ஊக்குவித்து உற்சாகப்படுத்துவீர்கள். பொதுவாக இன்று, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மகரம்: தங்களது வாழ்க்கையில், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முட்டாள்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களில் ஒருவராக நீங்கள் இருந்துவிட வேண்டாம். உங்களது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு செயல்பட்டால், பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். சுருக்கமாக கூறினால், உங்களது உணர்வுகள் வெற்றிக்கு தடையாக இருக்கும். அமைதியாக பொறுமையுடன் செயல்பட்டு, நேர்மறையான எண்ணம் கொண்டு இருந்தால், பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
கும்பம்:உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, உங்களது திட்டமிடல் போட்டியாளர்களுக்கு சவாலாக இருக்கும். சந்தேகங்களும், கவலைகளும் காற்றில் கரைந்து போய், வெற்றி இலக்கை நோக்கி உறுதியாக செல்வீர்கள். வெற்றிப்பாதையில், பலரின் மனங்களையும் வெற்றி கொள்வீர்கள்.
மீனம்:நிதி நிலைமையை பொருத்தவரை, இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பணவரவு அதிகம் இருக்கும். உங்களது தொடர்பு திறன் காரணமாக, நல்ல பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு, எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும். உங்களிடமுள்ள தொடர்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.