தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

2025 கன்னி ராசி: முயற்சி திருவினையாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்! - 2025 RASIPALAN FOR VIRGO

Virgo New Year Rasipalan: 2025ஆம் ஆண்டிற்கான கன்னி ராசிக்காரர்களின் ஆண்டு பலனைக் காணலாம்.

கன்னி ராசி - கோப்புப் படம்
கன்னி ராசி - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2025, 12:16 AM IST

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, சிறிது மன அழுத்தத்தமும் அமைதியின்மையையும் ஏற்பட வாய்ப்புள்ளது அது மட்டுமின்றி. உத்தியோகம் தொடர்பான சில பின்னடைவுகள் காரணமாக உங்களுக்கு சில ஏமாற்றங்கள் கூட ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடனான ஈகோ மோதல்களைத் தவிர்ப்பது முக்கியம். கூடுதலாக, வீட்டிலும் சில பிரச்சினைகள் தலை தூக்கக்கூடும். இது உங்கள் துணையிடனான உங்கள் உறவில் ஒரு தொய்வுக்கு வழிவகுக்கும். இந்த சவால்களை சரியான முறையில் கையாள்வதற்கு, நீங்கள் கணிசமான நேரத்தையும் முயற்சியையும் செய்ய வேண்டும்.

இந்த காலகட்டத்தில், உங்கள் வியாபாத்தில் எந்த ஒரு பெரிய வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் சிறப்பான வருங்காலத்திற்கு வகை செய்யும் நீண்ட கால உத்திகளைக் கொண்டிருப்பது நல்லது. அதிர்ஷ்டகாற்று உங்கள் பக்கம் வீசலாம். இதனால் இடையில் தடைபட்ட, நிறுத்தப்பட்ட திட்டங்களை முடிக்கவும், உங்கள் தொழில் வாழ்க்கையில் வெற்றியை அடையவும் உதவுகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் அவர்களின் திறன்களில் மீது அதீத தன்னம்பிக்கையையும், நம்பிக்கையும் வைப்பதைத் தவிர்ப்பது மிக அவசியம். இந்த ஆண்டு நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்பு இருந்தாலும், ஆரம்பத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

மார்ச் முதல், நீங்கள் முதலீடு செய்து வைத்துள்ள நீண்ட கால வணிக முதலீடுகளிலிருந்து பாசிட்டிவ்வான விஷயங்கள் வரத் துவங்குவதையும் நீங்கள் காணலாம். மாணவர்கள் தங்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். நண்பர்கள் உட்பட உங்களை சுற்றியுள்ள அனைவரிடம் இருந்து ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஆரம்பத்தில் இல்வாழ்க்கையில் சில சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.

ஆனால் இவை காலப்போக்கில் சரியாகிவிடும். உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள். ஆண்டின் பிற்பாதியில் தொழில் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு, மன அழுத்தத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் உங்கள் மனம் இலகுவாக இருந்தால் மட்டுமே உங்கள் செயல்திறன் நன்றாக இருக்கும். அக்டோபர் மாதம் முதல் உங்கள் வருமானம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் இரண்டாம் பாதி காதல் உறவுகளுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் காதல் திருமணத்தில் கைகூடி வெற்றி பெற ஒரு வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்டம் பல்வேறு அம்சங்களில் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உங்கள் தொழில்முறை வெற்றிக்கு பங்களிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டில் வாய்ப்புகளைத் தேடுவதைக் கவனியுங்கள். உங்கள் பெற்றோரின் உடல்நலம் கவலைக்குரியதாயிருக்கலாம், உங்கள் கவனிப்பு தேவைப்படலாம். அவர்களின் நல்வாழ்வில் விழிப்புடனும் கவனத்துடனும் இருங்கள். நோய்கள் வருவதைத் தவிர்க்க, எண்ணையில் பொரித்ததையும், காரமான உணவுகளை அதிகப்படியாக உண்பதை தவிர்க்கவும்.

ABOUT THE AUTHOR

...view details