தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

ஆசைகளை அடக்கி ஆளும் சக்தி இந்த ராசிக்கு மட்டும் தான் இருக்காம்? அது யார் தெரியுமா? - Today Tamil Rasipalan - TODAY TAMIL RASIPALAN

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் இன்றைய பலன்களை பார்க்கலாம்.

Etv Bharat
Representative Image (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 6:15 AM IST

மேஷம்: இன்று, நீங்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க சிறந்த முறையில் தயாராக உள்ளீர்கள். உங்களுடைய உற்சாகத்தை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது பலவற்றை திட்டமிடுவதைக் காட்டிலும் செய்வதற்கான ஒரு நேரம். இன்று உங்களால் மலைகளை தூக்கவும் சமுத்திரத்தைக் கடக்கவும் கூட இயலும். பிற்பாதியில் நீங்கள் கொண்டாட்டங்களைச் செய்யலாம்.

ரிஷபம்: இந்த நாள் முழுவதும் மூன்று உணர்ச்சிகள் உங்கள் மனநிலையில் இருக்கும்: சக்தி, களிப்பு, உற்சாகப் பிரவாகம். அத்தகைய உற்சாகம் எப்போதும் தொற்றிக் கொள்ளக் கூடியது. எனவே உங்கள் அன்புக்குரியவர்களும் அருகாமையில் உள்ளவர்களும் அதனால் இன்புறுவார்கள். நாள் செல்லச் செல்ல நற்பலனும் அதிகரிக்கும். நீங்கள் களைப்பாக உணர்ந்தால் வேலையிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்கவும்.

மிதுனம்:உங்களது தனிப்பட்ட வாழ்க்கை சில உயர்வுகளையும், தாழ்வுகளையும் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மாலையில் கவனமும் அக்கறையும் கட்டாயமான தேவைகளாக இருக்கும். பணம் தொடர்பான விஷயத்தில் நீங்கள் இடர் ஏற்று செயல்படக்கூடும். சிந்தனையை அதிகம் செலுத்தாமல் உங்கள் நம்பிக்கையைக் காத்து அகமகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும்.

கடகம்: உங்கள் செயல்பாடுகளை உள்ளத்தூண்டுதல் ஆக்கிரமிக்கும். நாளின் பிற்பகுதியில், எதிர்மறை விஷயங்களை புறந்தள்ளி நேர்மறை விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தவும். உங்கள் சிந்தனையைக் காட்டிலும் செயல்பாடே நல்விளைவை ஏற்படுத்தும். மெல்லிசையில் உங்கள் இதயத்தையும் புத்தியையும் லயிக்கச் செய்யுங்கள்.

சிம்மம்: உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கும். உங்கள் கடின முயற்சிகளுக்கு உரிய வெகுமதிகள் கிடைக்கும். அனைத்து சுபமான பணிகளையும், புதிய புராஜெக்ட்களையும் மதியத்தில் தொடங்கவும். உங்கள் தாராள குணமும் இயலுந்தன்மையும் உங்களை இன்று அமைதியாய் வைத்திருக்கும்.

கன்னி: அலுவலகத்தில் உங்களுக்கு தலைமையேற்கும் வாய்ப்பும் ஒரு திட்டத்தை முன்மொழியும் வாய்ப்பும் இன்று கிடைப்பதற்கான அறிகுறி தெரிகிறது. உங்களுடைய மதியம் வின்டோ ஷாப்பிங் மற்றும் அன்புக்கு உரியவர்களுக்கு பரிசு வாங்குவது என கழியும். உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது குடும்பத்தினருடன் நீண்ட கால இலக்குகளை திட்டமிடுவதில் உங்கள் மாலைப் பொழுது கழியும்.

துலாம்:இன்றைய நாள் குடும்பம் தொடர்பானதாக இருக்கும். பெரிய குடும்பம் என்றால் நன்மையும் பெரியதாக இருக்கும். உங்களுடைய நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள் உங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தக் கூடும்.

விருச்சிகம்: விஷயங்களை ஒருங்கிணைக்கும் உங்கள் திறமையை இன்று நன்கு வெளிப்படுத்துவீர்கள். பணியிடத்தில் உங்கள் வேலை மீது உங்களுக்கு தனிச்சிறப்பான ஒரு விருப்பம் ஏற்படும். நாளின் பிற்பகுதியில், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு நீங்கள் நல்ல தீர்வுகளைக் காண்பீர்கள். உங்கள் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானங்களை எடுக்க, நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகள் குறித்தும் நன்கு ஆராய வேண்டியது அவசியம்.

தனுசு: உங்கள் எதிரிகளுக்கும் போட்டியாளர்களுக்கும் கவலைப்படக் கூடும். கடும் போட்டியில் கூட நீங்கள் வெற்றி பெறும் திறமை உங்களுக்கு உள்ளதால் நீங்கள் கொண்டாடுவதற்கான அற்புதமான வாய்ப்பு இது. மாலையில், சமூக சந்திப்புகளில் மகிழ்வதில் உங்கள் நெருக்கமானவர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடுவீர்கள்.

மகரம்: இன்று புதிய பொருளை நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்றால் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். அவ்வாறு செய்வது நன்மை தருவதாக இருக்கும். நீங்கள் திட்டப்படி நடப்பதை உறுதியாக இருந்தீர்களானால், விளைவு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நன்மை அளிப்பதாக இல்லாமல் போகக்கூடும் என்பதால் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும்.

கும்பம்:உங்கள் ஆசைகள் உங்களை அடக்கியாள்பவராக ஆக்கும். இன்று பேசக்கூடாததைப் பேசுவதற்கு வாய்ப்பு அதிகம். அதீத வற்புறுத்தலை நீங்கள் செய்தால், நாளை கவலைப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதீதமான முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.

மீனம்: உங்களுக்கு விருப்பமானவர்களுடன் இன்றைய பொழுதைக் கழிப்பதற்கு ஆயத்தமாவீர்கள். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எதை செய்தாலும் செய்யவில்லை என்றாலும், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக உங்களது வசதியையும் சௌகரியத்தையும் விட்டுக் கொடுப்பீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details