மேஷம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல் உணர்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்தப் பல முயற்சிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். வருங்கால பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக்கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.
ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்குச் சிறிது கடினமான, பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். பின்னடைவுகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாகச் செயல்படவும். நன்றாகச் சிந்தித்து, பொறுமையாகச் செயல்படவும். இன்றைய தேவை அது மட்டுமே. தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் சிறந்த வெற்றியடைவீர்கள்.
மிதுனம்: கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் தோன்றும். அதனால் நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், உங்களது எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தைப் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.
கடகம்: இன்று, உங்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் புதிதாகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்றைய தினத்தில், தோட்டவேலை, சமையல் செய்தல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் ஆகியவற்றிற்குச் சிறந்த நாளாகும். இன்றைய தினத்தில், கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், உங்கள் காதல் உறவிற்காக, நேரம், பணம் ஆகியவற்றைச் செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சிம்மம்: இன்று, பங்குச்சந்தையின் மூலம் நிதி வரவு இருக்கக்கூடும். நீங்கள் முதலீட்டாளர் என்றால், உங்கள் முதலீடுகளுக்கு நல்ல லாபம் இருக்கும். நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்த கடன்களைத் தீர்த்து விடுவீர்கள். பொழுதுபோக்கிற்காகப் பணம் செலவழிக்கும் வாய்ப்பும் உள்ளது.
கன்னி: இன்று, குடும்ப உறவுகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அவர்கள் உங்களையும் உங்கள் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தகத் துறையைப் பொருத்தவரை சாதகமான நிலை இருக்கும். மாலையில் நீங்கள் நிம்மதியாக நேரத்தைக் கழிப்பீர்கள். நீங்கள் கோயிலுக்குச் செல்ல பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.