தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / photos

கழுகுப் பார்வையில் ஒகேனக்கல் காவிரி ஆறு.. பிரத்யேக புகைப்படங்கள்! - Hogenakkal Cauvery river - HOGENAKKAL CAUVERY RIVER

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடியிலிருந்து 1.5 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 9:40 PM IST

கர்நாடகா மற்றும் கேரளாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 10 நாட்களாக தொடர்ந்து கனமழை (ETV Bharat Tamil Nadu)
கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு (ETV Bharat Tamil Nadu)
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் (ETV Bharat Tamil Nadu)
தொடர் மழையால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிப்பு (ETV Bharat Tamil Nadu)
62 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து தற்போது 1 லட்சம் கன அடியை தொட்டுள்ளது (ETV Bharat Tamil Nadu)
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சுற்றலாத் தலத்தில் பரிசல் இயக்கவும், அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீட்டிப்பு (ETV Bharat Tamil Nadu)
நீர்வரத்து அதிகரிப்பதால் காவிரி கரையோரப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் (ETV Bharat Tamil Nadu)
காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் (ETV Bharat Tamil Nadu)
பிலிகுண்டுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் மூலம் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிப்பு (ETV Bharat Tamil Nadu)
வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் (ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details