ஹைதராபாத்:உத்தர ராமாயணம்' அல்லது ராமாயணத்தின் 'உத்தர காண்டம்' இந்த இதிகாசத்தின் உண்மையான ஓர் பகுதியா? உண்மையில் வால்மீகி முனிவர் இதை எழுதினாரா? என்ற கேள்வியை முன்வைத்து அறிஞர்கள் பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து விவாதித்துள்ளனர்.
சீதை மற்றும் லவா, குசா ஆகிய இரு இளவரசர்களின் துறவு பற்றி உத்தர காண்டம் உணர்ச்சிகரமாக விவரிக்கிறது. ஆயினும், உத்தர காண்டம் குறித்த கேள்விக்கான விடையை அறிய ஆதாரங்கள் உள்ளனவா? சர்ச்சைக்குரிய உத்தர காண்டம் குறித்து இங்கு ஆராய்வோம்.
‘மந்தாரமு’வில் இருந்து தொடங்கும் வாதங்கள்:ராமாயணத்துக்கு ‘மந்தாரமு’ (கல்பவிருட்ஷம் அல்லது எல்லாவற்றையும் அளிக்கும் மரம்) என்ற தலைப்பில் வாசுதாச சுவாமிகள் எழுதிய உரையில், உத்தர காண்டம் ராமாயணத்தின் உண்மையான ஓர் பகுதியாகும் என கூறுகிறார். அத்துடன் தமது இந்த கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில் 10 வாதங்களை அவர் முன்வைக்கிறார். அவற்றில் முக்கியமான மூன்று கூற்றுகள் பின்வருமாறு:
காயத்ரி மந்திரத்தில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. வால்மீகி முனிவர் 24,000 சுலோகங்களைக் கொண்ட ராமாயணத்தை எழுதினார். காயத்ரி மந்திரத்தின் ஒவ்வொரு தொடர்ச்சியான எழுத்தையும் ஒவ்வொரு ஆயிரம் பாடல்களின் தொடக்க எழுத்தாகப் பயன்படுத்தினார். இவற்றில் உத்தர காண்டம் இல்லையென்றால், ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.
பால காண்டத்தின் ஸ்லோகம் 1.1.91 இல், நாரத முனிவர் ராம ராஜ்ஜியத்தை தந்தைகள் தங்கள் மகன்களின் மரணத்தைப் பார்க்கமாட்டார்கள் ( "ந புத்திரமரணம் கிஞ்சித் த்ராக்ஷ்யந்தி புருஷா") என்று விவரிக்கிறார். இது உத்தர காண்டத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பால காண்டத்தின் ஸ்லோகம் 1.3.38, சீதையை துறத்தல் (வைதேஹ்யாஷ விசர்ஜனம்) என்ற சொற்றொடரை உள்ளடக்கியது, இது உத்தர காண்டத்துடன் தொடர்புடைய அத்தியாயத்தை முன்னறிவிப்பதாகத் தெரிகிறது.
காவியத்தின் பிற பகுதிகளிலிருக்கும் உரைச் சான்றுகளை கொண்டு மேற்கண்ட வாதங்களைப் பிரிப்போம்.
காயத்ரி மந்திரத்துடனான தொடர்பு:காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களை மனதில் வைத்து வால்மீகி முனிவர் ராமாயண காவியத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களை இயற்றினார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 1:1000 என்ற இந்த விகிதாச்சாரம் ஒரு சாதனையாக இருக்கும். அது எங்காவது ஒரு குறிப்பு அல்லது உரிமைகோரலுக்கு தகுதியானது.
ஆனால், வால்மீகி முனிவர் அத்தகைய ஒரு தொடர்பை ஒருபோதும் கூறவில்லை அல்லது சுட்டிக்காட்டவில்லை. விளக்க உரையிலோ அல்லது வேறு இடத்திலோ ராமாயணத்துக்கு காயத்ரி மந்திரத்துடனான தொடர்பு குறித்த குறிப்புகள் இடம்பெறவில்லை. மேலும், ராமாயணத்தின் முக்கிய உரையில் பல பகுதிகள் காலப்போக்கில் ஒட்டப்பட்டதாக பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவையே, ராமாயணத்தில் உள்ள வசனங்களின் எண்ணிக்கைக்கும் காயத்ரி மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்கும் இடையே உள்ளதாகக் கூறப்படும் தொடர்பை உடைப்பதாக உள்ளன.
ராம ராஜ்ஜியத்தின் விளக்கம்:பால காண்டத்தின் 1.1.90 முதல் 1.1.97 வரையிலான ஸ்லோகங்கள், நாரத முனிவரால் விவரிக்கப்பட்ட ராமராஜ்யத்தைப் பற்றிய சுருக்கமான விளக்கத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக, 1.1.91 முதல் தொடங்கும் ஸ்லோகங்கள் எதிர்காலத்தில் (Future Tense) உள்ளன. 6.128.95 முதல் 6.128.106 வரையிலான யுத்த காண்டத்தின் முடிவில் உள்ள ஸ்லோகங்களும் இதேபோன்று எதிர்காலத்தில் அமைந்துள்ளன. பால காண்டம் மற்றும் யுத்த காண்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்லோகங்கள் மீண்டுமொரு ஒரு தனி காண்டத்தின் ( உத்தர காண்டம்) தேவையை இல்லாமல் செய்கிறது.
வாசுதாச சுவாமிகளின் ராமாயண உரை விளக்கமானது (ஸ்லோகம் 1.1.91), தந்தைகள் தங்கள் மகன்களின் மரணத்தைப் பார்க்கமாட்டார்கள் என்று கூறுகிறது. ஆனால், உத்தர காண்டத்தின் 73 முதல் 76 வரையிலான சர்காஸ் ஒரு பிராமண சிறுவனுடைய மரணத்தின் கதையை எதிர்பார்க்கிறது என்று அவர் வாதிடுகிறார்.
அதேசமயம் 1.1.91 ஸ்லோகம், ராம ராஜ்ஜியத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்காது என்று உறுதியளிக்கிறது. அத்தகைய மரணத்தின் உண்மையான நிகழ்வு, அது சாம்புகாவால் வர்ணவ்யவஸ்தாவை மீறியதாகக் கூறப்பட்டது, மேலும் "தர்மத்தை" மீட்டெடுப்பதன் மூலம் இறந்த சிறுவனின் உயிர்த்தெழுதல் ஆகியவை மேலும் அதிகமான கேள்விகளை எழுப்புகின்றன.
இந்த அத்தியாயம், வால்மீகி முனிவரால் ராமாயணம் இயற்றப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்திருக்க வேண்டிய சமூக நெறிமுறைகளுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான பிரதிபலிப்பாக வருகிறது.
சீதையை துறப்பது:முதலாவதாக, 1.3.10 முதல் 1.3.38 வரையிலான ஸ்லோகங்கள், 1.1.19 முதல் 1.1.89 வரையிலான ஸ்லோகங்களில் நாரத முனிவர் கூறும் சுருக்கமான ராமாயணத்தை மீண்டும் கூறுகின்றன. இத்தகைய மறுவிவரிப்பு ஒரு விரிவுரையின் நல்ல தரமாக கருதப்படுகிறது, ஆனால் எழுதப்பட்ட ஓர் இலக்கியப் படைப்பில் மோசமான அணுகுமுறையாக கருதப்படுகிறது. இத்தகைய அடிப்படை விதி மீறலுக்கு வால்மீகி முனிவரை காரணம் காட்டுவது அவரது படைப்பு திறனை அவமதிப்பதாகும்.
இரண்டாவதாக, சொல்லப்பட்ட 1.3.10 முதல் 1.3.38 வரையிலான ஸ்லோகங்களை நீக்கினாலும் அது கதையின் தொடர்ச்சியில் எவ்விக பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றால், அவை ( உத்தர காண்டம்) பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்ற கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைகிறது.
மூன்றாவதாக, "வைதேஹ்யாஷ்ச விசார்ஜனம்" என்ற சொற்றொடர், நாரத முனிவரின் சுருக்கமான ராமாயண பாராயணத்தில் இடம் பெறவில்லை, ஆனால் பிரம்மாவின் மிகக் குறுகிய மறுபிரவேசத்தில் எப்படியோ மாயமாக இடம்பெறுகிறது. மேலும் உத்தர காண்டத்தின் வேறு எந்தக் கதையும் இந்தப் பதிப்பில் குறிப்பிடப்படவில்லை.
மேற்கூறியவை அனைத்தும், ஸ்லோகங்கள் 1.3.10 - 1.3.38 ஆகியவை உத்தர காண்டத்திற்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதற்காக பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன,
சிந்திக்க இன்னும் சில விஷயங்கள்
உத்தர காண்டம் குறித்த வாசுதாச ஸ்வாமியின் வாதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததுடன், வால்மீகி முனிவருடைய காவியத்தின் அசல் பதிப்பின் ஒரு பகுதியாக உத்தரகாண்டம் இல்லை என்பதைக் குறிக்கும் பல காரணங்களை நாம் காண்கிறோம்.