ஹைதராபாத்: புதுப்பிக்க தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி மின்னாக்கத்தின் வாயிலாக பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்பட உள்ளது. இது மிகவும் நீடித்து நிலைத்திருக்கும் ஹைட்ரஜனாக இருக்கும்.
தேசிய அனல் மின் கழக லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.1.85 லட்சம் கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரஜன் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தற்போதைய அறிவிப்பு, இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தில் குறிப்பிடத்தக்க தருணத்தை உருவாக்கி உள்ளது. ஆந்திர மாநிலம் புடிமடகாவில் உள்ள இந்த பசுமை ஹைட்ரஜன் முனையம் புதுப்பிக்கதக்க எரிசக்தி உற்பத்தி, தயாரிப்பு, சி்கலான கட்டமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும். உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் வரைபடத்தில் இந்தியாவை முன்னணி நாடாக முன்னிறுத்தும். ஆனால், பசுமை ஹைட்ரஜனை முக்கியத்துவம் வாய்ந்ததாக எது மாற்றியது, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஏன் இந்த திட்டம் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கிறது.
பசுமை ஹைட்ரஜன் ஒரு விஷயமாக இருப்பது ஏன்?
புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்னாக்கத்தின் வாயிலாக பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மிகவும் நீடித்து நிலைத்திருக்கும் ஹைட்ரஜன் வடிவமாகும். இயற்கை எரிபொருளை சா்ந்த சாம்பல் அல்லது நீல ஹைட்ரஜன் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க கார்பன்டை ஆக்சைடு உமிழ்வு வெளியாகிறது. ஆனால், பசுமை ஹைட்ரஜன் என்பது உமிழ்வு இல்லாத வகையில் உருவாக்கப்படும்.
போக்குவரத்துறை, சுத்திகரிப்பு நிலையங்கள், உரம், இரும்பு போன்ற துறைகளில் பசுமை குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் செயல்பாட்டுக்கான தேவையை இதன் பன்முக திறன் உருவாக்குகிறது. இந்தியா போன்ற நாடுகளில், 2070ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் உமிழ்வு இல்லாத நிலையை அடைய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இயற்கை எரிபொருளை சார்ந்து இருப்பதையும் பருவநிலை மாற்றத்தின் பிரச்னையை குறைப்பதற்கான முக்கியமான வழியாக பசுமை ஹைட்ரஜன் திகழ்கிறது.
தேசிய அனல் மின் கழக லிமிடெட்டின் மாற்றத்துக்கான திட்டம்
1600 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் தேசிய அனல் மின் கழக லிமிட்டெட்டின் ஹைட்ரஜன் முனையம், புதுபிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், மின்னாக்கங்கள், பசுமை ரசாயன உற்பத்தி, உப்பை நீக்கும் ஆலை மற்றும் ஒரு பரிமாற்ற காரிடரை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1500 டன்கள் பசுமை ஹைட்ரஜன், நீடித்த நிலையான விமான எரிபொருள், பசுமை மெத்தனால் போன்ற 7500 டன் துணை பொருட்கள் தயாரிப்பு என்ற ஆண்டு இலக்குடன், இந்த திட்டம் ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரஜன் அணுகலை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. சுற்றுச்சூழல் பலன்களுக்கு அப்பால், இந்த திட்டத்தின் வாயிலாக ஆந்திராவுக்கு ரூ.1.85 லட்சம் கோடி முதலீடுகள் கிடைக்கும், வேலை வாய்ப்பை அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்
இந்த மாற்றத்துக்கான பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும். இந்த இயக்கத்தின் மூலம் ரூ.8 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்ப்பது, 6 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.1 லட்சம் கோடிக்கு இயற்கை எரிபொருள் இறக்குமதியை குறைப்பது ஆகியவை முக்கிய நோக்கங்களாகும். இந்த நீண்டகால திட்டத்துக்காக பசுமை ஹைட்ரஜன் மாற்றத்துக்கான நிதியாக தேவையை அதிகரித்தல், செலவு குறைப்புக்காக ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியாவை சர்வதேச தலைமை நிலைக்கு உயர்த்தும்.
சவால்கள்
பசுமை ஹைட்ரஜன் அதன் திறன்களுக்கு இடையே, பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ளது. உற்பத்தி செலவு என்பது மிகவும் அதிகமாகும். தலா ஒரு கிலோ தயாரிக்க 3.5 டாலர் முதல் 5.5 டாலர் செலவாகும். அதே நேரத்தில் சாம்பல் அல்லது நீல ஹைட்ரஜன் தயாரிப்புக்கு 1.9 டாலர் முதல் 2.4 டாலர் வரை மட்டுமே ஆகும். மின்னாக்க தொழில்நுட்பம் ஒரு முக்கியமான கூறாக இருக்கிறது. இது இன்னும் ஒருசெலவு பிடிக்கக் கூடிய தடையாகும். இதன் விலை என்பது ஒரு கிலோவாட்டுக்கு 500 டாலர் முதல் 1,800 டாலர் வரை ஆகும். மேலும் மின்னாக்க கருவியானது உள்ளூர் மட்டத்தில் தயாரிப்பு என்பது குறைவாக உள்ளது. தொடர்புடைய உப பொருட்களான கம்பரஷர், மெம்பிரானீஸ் மற்றும் கட்டுப்பாடு யூனிட்கள் இறக்குமதியை சார்ந்திருக்கின்றன.
இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு நேரிடும். இழப்பு மதிப்பில் குறிப்பிடத்தக்க தொகையைக் கொண்ட உற்பத்தி சாரா முதலீடு இணைந்திருக்கிறது. பெரும் அளவுக்கு முதலீடு தேவைப்படுமோ என்ற தயக்கம், சிக்கல், அபாயம் மற்றும் நீண்டகால திட்டம் என்ற உணர்வு முதலீட்டாளர்களுக்குள் எழும். திரும்ப பெறும் காலத்துக்கு முன்பு இழப்பு மதிப்பீட்டை நோக்கி திரும்பும் அபாயம் கொண்டதாக இருக்கலாம்.
முதன் முதலாக இந்த தொழிலில் ஈடுபடுவதன் மூலம் பின்னடைவு நேரிடுமோ என்பது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகும். எனவே குறைந்த கார்பன் கொண்ட எரிசக்தி பொருளாதாரத்துக்கு மாறுவதில் மிக கவனமான கொள்கை திட்டம், அபாய மேலாண்மை முக்கிய தேவையாகும். இன்னொருபுறம் முன்கூட்டியே மேற்கொள்வது அடுத்தடுத்த வசதிகளை மேலும் திறன் கொண்டதாக, குறைந்த விலையில், விரைவாக கட்டமைப்பை கொண்டிருப்பதாக இருப்பது, போட்டிசூழலில் சாதகமான கற்றல் செயல்பாடாக இருக்கும்
நிதி என்பது இன்னொரு தடையாகும். புதுமையான சர்வதேச தொழில்நுட்பத்துக்கான ஆரோக்கியமான சூழல் நிதிக்கு ஆதரவு அளித்தல் போன்ற உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை ஒரு முன்னெடுப்பாகும். நிதிதடைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஒருங்கிணைந்த கொள்கை கட்டமைப்பு முக்கியமானதாகும். நீண்டகால ஹைட்ரஜன் கொள்முதல் ஒப்பந்தங்கள், பகுதி அளவு கடன் உத்தரவாதம், இலக்குடன் கூடிய மானியங்கள் போன்ற முறைகள் முதலீட்டில் அபாயத்தை குறைக்கும் , தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும்.