தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

ஈரான் Vs இஸ்ரேல் மோதல்! பெட்ரோல் தட்டுப்பாடு வருமா? - West Asia on the boil - WEST ASIA ON THE BOIL

இஸ்ரேல் - ஈரான் மோதல் மேற்கு ஆசியா முழுவதும் விரிவாக்கப்படும் பட்சத்தில் கச்சா எண்ணைய் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சர்வதேசப் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும்.

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் (image credits-AP)

By Major General Harsha Kakar

Published : Oct 4, 2024, 3:36 PM IST

Updated : Oct 4, 2024, 5:47 PM IST

ஹைதராபாத்: கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் மேற்கு ஆசிய நாடுகள் கொதித்துக் கொண்டுள்ளன. ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி அமைப்பினர் மற்றும் ஈராக், சிரியா நாடுகளில் பரவியுள்ள ஈரான் ஆதரவாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் மோதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக ஹமாஸ் தாக்குதல் நடத்தியதுதான் இந்த மோதல்களுக்கான தொடக்கப்புள்ளி எனலாம்.

பணயக்கைதிகளை இஸ்ரேல் பிடித்து வைத்திருந்த நிலையில், இஸ்ரேல் ஆரம்ப கட்டத்தில் ஹமாஸ் உடன் ஒப்பந்தம் செய்து கொள்வதாகக் கூறியது. ஆனால், ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளின் தலையீடு ஆதரவு காரணமாக இப்போது லெபனான் வரையிலும் மோதல் நீடிக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலை விரிவாக்குவதை தவிர்த்து உள்ளூரிலேயே சிக்கலை முடித்துக் கொள்ளலாம் என்று இஸ்ரேல் நினைத்து. எனினும், இந்த அமைப்புகளுக்கு ஈரானின் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையிலான ஆதரவு மோதலை அதிகரிக்கக்கூடிய சூழலுக்கு இஸ்ரேலை இட்டுச் சென்றது.

இந்த ஆண்டின் ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரக அலுவலகத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த 7 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். எனவே ஈரான் இதற்கு பதிலடி கொடுக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி இஸ்ரேல் மீது 300 ஏகவுகனைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. தவிர, ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்தும் ஈரான் தாக்கியது. இதற்கு பதிலடியாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஈரானினின் எஸ்-300 என்ற ஏகவுகனை கருவியை தாக்கி அழித்தது. இருதரப்பும் அப்போதைக்கு மோதலை முடித்துக் கொண்டன.

தெஹ்ரானில் ஈரான் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் (Image credits-AP)

அண்மைகாலமாக ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கங்களின் முன்னணி தலைவர்கள் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஈரான்-இஸ்ரேல் இடையே மீண்டும் பதற்றத்தை பற்ற வைத்தது. ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹரானில் கொல்லப்பட்டபோதும் கூட ஈரான் பதிலடியில் ஈடுபடவில்லை. இது இஸ்ரேலுக்கு தைரியத்தை வரவழைத்திருக்கக் கூடும். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா, ஈரான் பிரிகேடியர் ஜெனரல் அப்பாஸ் நில்ஃபோரூஷன் ஆகியோர் கொல்லப்பட்டபோதும், லெபான் நாட்டுக்குள் தரைவழியாக தாக்குதல் நடத்தியதற்கும் வலுக்கட்டாயமாக எதிர்வினையை எதிர்கொண்டது. தமது ஆதரவாளர்களிடம் இருந்து ஈரானுக்கு அழுத்தம் ஏற்பட்டது. இப்போது செயல்பட்டிருக்காவிட்டால் ஹிஸ்புல்லா இயக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்க நேரிடுவதாக இருந்திருக்கும்.

இதையும் படிங்க:"எங்கள் மண்ணில் கால் வைக்கக்கூடாது" - ஐ.நா. சபை பொதுச் செயலாளருக்கு தடைவிதித்த இஸ்ரேல்!

அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்கா தரப்பில் இருந்து லெபனான், காசா மீதான தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் எந்தவித அழுத்தத்தையும் எதிர்கொள்ளவில்லை. அமைதி நிலவுவதற்கு வாய்ப்பில்லை என்பது இப்போது தெளிவாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலால் பாதிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து தாக்குவதற்கு இஸ்ரேல் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில், ஈரான் 200 ஏகவுகனைகளை வீசி இஸ்ரேல் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியது. தாக்குதலுக்கு முன்பு ரஷ்யா வாயிலாக இந்த தகவலை மேற்கு நாடுகளுக்குத் தெரியப்படுத்தியது. சிறிய சேதாரமே நேரிட்டதாக இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர மோதலை மேலும் விரிவாக்க வேண்டும் என்று ஈரான் திட்டமிடவில்லை. இஸ்ரேலின் பின்னணியில் மேற்கு நாடுகள் ஆதரவு அளிப்பது போல தமக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்பதையும் ரஷ்யா, சீனா ஆகியவை தூதர ரீதியிலான ஆதரவை மட்டுமே அளித்து வருகின்றன என்பதையும் ஈரான் புரிந்திருக்கிறது.

ஜெருசலேம் மீது ஈரான் தாக்குதல் (image credits-AP)

இஸ்ரேல் பலம் வாய்ந்த ராணுவமாக இருந்தபோதிலும், சிறிய நாடு என்ற வகையில் ஆழமான உத்திகளை மேற்கொள்வதில் அவ்வளவாக அனுபவம் வாய்ந்ததாக இல்லை. ஈரான் பெரிய நாடு என்றபோதிலும், அரபு நாடுகளுடன் உறவில் இருக்கிறது. இஸ்ரேல், ஈரான் மீது நேரடியான தாக்குதல் தொடுத்தால் அரபு நாடுகளிடம் இருந்து எந்த ஒரு ஆதரவும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இந்தியாவுக்கான ஈரானிய தூதர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ஈரான், இஸ்ரேல் இரண்டு நாடுகளுடனும் இந்தியா தொடர்பில் இருக்கிறது. போரை நிறுத்தும்படி இஸ்ரேலிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், ஈரான் தமது வரம்பை உணர்ந்தே இருக்கிறது. இஸ்ரேலுடன் ஒருபோதும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. தமது ஆதரவு அமைப்புகளுக்காக ட்ரோன் மற்றும் ஏவுகனை தாக்குதல் மூலம் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது. காசாவில் ஹமாஸை முற்றிலும் துடைந்தெறிந்த போதிலும், ஈரானோ அல்லது ஹிஸ்புல்லா அமைப்போ எந்த ஒரு அணியையும் உருவாக்கவில்லை. இஸ்ரேலை அழுத்தத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கிறது. இந்த பலவீனத்தை உணர்ந்தே, ஹமாஸ் பெரும்பாலும் வலு குறைந்த நிலையில் காசாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்புடன் மோதலை இஸ்ரேல் விரிவாக்கம் செய்திருக்கிறது.

எனினும் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தாக்கி இஸ்ரேல் சேதத்தை உண்டாக்கும் பட்சத்தில், மேற்கு ஆசியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் திறன் தெஹ்ரானுக்கு உள்ளது. இந்த சூழலில் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக வான்வழி தாக்குதல் ஏதும் தொடங்க இயலாது. எனினும் ஈரானுக்கு எதிரான வலுவான செய்தியை சொல்வதற்கான செயலில் ஈடுபடக் கூடும். பதிலடி கொடுப்பதன் தன்மையைப் பொறுத்தே இந்த மோதல் விரிவாகுமா அல்லது உள்ளூர் மட்டத்திலேயே இருக்குமா என்பது தெரியவரும். இஸ்ரேல் தனது தாக்குதலை திட்டமிடுவதற்காக உலகம் காத்திருக்கிறது. விரிவாக்கப்படும் மோதல் காரணமாக கச்சா எண்ணைய் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்படும்.

ஈரானின் சாபஹர் துறைமுகத்தை இந்தியா முன்னெடுத்தது. எனவே இது இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்கு ஆகாது. ஆகவே, இந்த மோதலில் இந்தியா யார் தரப்புக்கும் ஆதரவாக குரல் கொடுப்பதில் இருந்து விலகி இருக்கிறது. பேச்சுவார்த்தை மூலமும் சுய கட்டுப்பாடு மூலமும் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்துகிறது. வரும் வராங்களில்தான் மேற்கு ஆசியா சூழல் எவ்வாறு இருக்கும் என்பது தெரியவரும்.

Last Updated : Oct 4, 2024, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details