தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சமையலை ஈஸியாக்கும் 7 கிச்சன் டிப்ஸ்...நோட் பண்ணிக்கோங்க! - KITCHEN TIPS

வீட்டில் உள்ள நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கியமான கிச்சன் குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 22, 2025, 1:19 PM IST

சமையல் என்பது ஒரு கலை! இதில் சில நேரங்களில் சொதப்பல் பல நேரங்களில் அசத்தல் என மாறி மாறி ஏற்படுவது இயல்பு தான். ஆனால், சில டிப்ஸ் மற்றும் ஹேக்ஸ்களை தெரிந்து கொள்வதன் மூலம், சமையல் எளிமையாக மாறுவதோடு, அதில் உள்ள ஆர்வமும் அதிகரிக்கும். அந்த வகையில், பேச்சுலர்ஸ் முதல் திருமணத்திற்கு தயாராகும் ஆண்கள், பெண்கள் மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் இந்த டிப்ஸ்களை தெரிந்து கொண்டு சமையலில் அசத்துங்கள்.

  • சாம்பாரில் புளி அதிகாகிவிட்டால், ஒரு சின்ன துண்டு வெல்லம் அல்லது ஒரு டீஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள். இப்படி செய்வதால், அதிகமான புளிப்பு சுவை நீங்கி சுவை அதிகரிக்கும். அதே போல, சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன், ஒரு டீஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும். இதனால், சாம்பாரின் மனம் அதிகரிக்கும்.
  • தேங்காய் ஓட்டில் இருந்து தேங்காயை முழுவதுமாக எடுக்க இனி கத்தியை பயன்படுத்தி சிரமப்பட வேண்டாம். தேங்காயை இரண்டாக உடைத்து, குறைந்த தீயில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும். பின்னர், அடுப்பை அணைத்து சிறுதி நேரம் கழித்து பார்த்தால், தேங்காய் சிரட்டையில் இருந்து தனியாக பிரிந்து வந்திருக்கும்.
கோப்புப்படம் (Credit - Pexels)
  • பூண்டு உரிப்பதை சிம்பிளாக மாற்ற, தேவையான அளவு பூண்டை எடுத்து தனித்தனியாக பிரித்து வைக்கவும். இப்போது இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து வெதுவெதுப்பான நீரை ஊற்றி 3 நிமிடஙளுக்கு அப்படியே விடவும். இப்போது , பூண்டின் தோலை அகற்றினால் ஈஸியாக உரிந்து வந்துவிடும். இந்த முறையை பயன்படுத்தி பூண்டுகளை உரித்து ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்துக்கொள்ளுங்கள்.
  • 250 கிராம் டீ தூளில் 1 டேபிள் ஸ்பூன் இன்ஸ்டண்ட் காபி தூள் சேர்த்து சேமித்து வைக்கவும். இதை பயன்படுத்தி டீ போடும் போது, டீ கடையில் குடிப்பதை போல நிறம், சுவை, மனம் கிடைக்கும். டீ போட்ட பின் வடிகட்டிய டீ தூளை ரோஜா செடிகளில் உரமாக பயன்படுத்தலாம். வாரத்திற்கு ஒரு முறை செடிக்கு உரமாக கொடுத்து வர, செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கும்.
கோப்புப்படம் (Credit - Credit - Pexels)
  • மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்ற மறந்து விட்டீர்கள் என்றால், கொதிக்கும் தண்ணீரில் மீதமான சாதத்தை சேர்த்து அடுப்பை அணைக்கவும். 2 நிமிடங்களுக்கு பின்னர் வடிகட்டி பயன்படுத்தினால் ப்ரஸாக வடித்த சாதம் போலாகிவிடும்.
கோப்புப்படம் (Credit - Pexels)
  • பிஸ்கட்டை சாப்பிட்டு மீதியை அப்படியே கவரில் வைக்கும் போது, ஒரு நாளில் நமத்து போய்விடும். இதை தவிர்க்க, ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, 3 கிராம்பு சேர்த்து பிஸ்கட்களை வைத்து மூடிவிடவும். இப்படி செய்யும் போது, பிஸ்கட் நீண்ட நாட்களுக்கு மொறு மொறுப்பாக இருக்கும்.
கோப்புப்படம் (Credit - Pexels)
  • வெண்டைக்காயை தண்ணீரில் கழுவிய பின், ஒரு காட்டன் துணி மீது பரப்பி காத்தாடிக்கு அடியில் வைத்து விடுங்கள். வெண்டைக்காயில் உள்ள ஈரம் காய்ந்ததும் நறுக்கினால், பிசுபிசுப்பு தன்மை இருக்காது. அதே போல, வெண்டைக்காயை நறுக்கி எண்ணெயில் வதக்கும் போது, அரை டீஸ்பூன் மாங்காய் பொடி சேர்த்தால், காயின் நிறம் மாறாமல் சுவையை அதிகரிக்கும்.

இதையும் படிங்க:

ABOUT THE AUTHOR

...view details