திருநெல்வேலியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாட்கள் கட்சிக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை இரவு ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த மு.க ஸ்டாலின், புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையில் பொதுமக்களுடன் அல்வா ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தார். அதன்படி, சுவையான திருநெல்வேலி அல்வாவை வீட்டில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு: 2 கப்
- சர்க்கரை - 4 1/2 கப்
- நெய் - 200 மி.லி
- வறுத்த முந்திரி - 15
திருநெல்வேலி அல்வா செய்முறை:
ஸ்டெப் 1:
- ஒரு அகல பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசையவும்.
- சாஃப்டாக பிசைந்ததும், அதே பாத்திரத்தில் சுமார் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் அல்லது 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பின்னர், மாவை அதே நீரில் நன்கு அழுத்தி கரைக்கவும். மாவு முழுவதும் கரைந்ததும், வடிக்கட்டி அந்த பாலை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
- அல்வா செய்வதற்கு இந்த பாலை நன்கு புளிக்க வைக்க வேண்டும். அதற்கு, நாம் வடிகட்டி வைத்துள்ள பாலை பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் மூடி வைத்து விடுங்கள்.