வீடுகளில் செடி வளர்க்க விரும்புபவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது பூச்செடிகள் தான். அதிலும், மல்லிச்செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், மல்லிச்செடிகள் நட்டு வைத்த பின், ஒரு வருடமானாலும், துளிர் கூட விடாமல் இலைகள் மட்டும் அப்படியே இருக்கும். பூ பூக்க வைப்பதற்கு, நாம் என்ன செய்தாலும் பயன் இல்லாமல் போகும். இப்படியான சூழ்நிலையில், இயற்கையான இந்த பொருட்களை வைத்து தயாரிக்கும் இந்த உரங்களை செடிக்கு போட்டு பாருங்கள். மல்லிச்செடியில் பூக்கள் பூத்துக்குலுங்குவது நிச்சயம்!
மல்லிகை செடி உரங்கள்:
உரம் 1: புளித்த தயிரும், தேங்காய்யும்!
- முதலில், ஒரு கப் புளித்த தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மோராக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது, இந்த புளித்த மோரை ஒரு வாட்டர் பாட்டலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- அடுத்ததாக, அதே மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்த ஒரு மூடி தேங்காய் துண்டுகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து, மோர் ஊற்றி வைத்த அதே பாட்டலில் சேர்க்கவும்.
- இதை, சூரிய வெளிச்சம் நேரடியாக படாத இடத்தில் ஒரு வாரத்திற்கு வைக்க வேண்டும். இந்த கரைசலில் மேற்படியாக தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஒரு வாரத்திற்கு பின்னர், இந்த கரைசலில் ஒரு பங்கு எடுத்து, செடிகளுக்கு உரம் கொடுக்கக்கூடிய ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதனுடன் 5 பங்கு தண்ணீர் ஊறி நன்கு கலந்து விடவும்.
- இந்த கரைசலை இலை,செடி,வேர்ப்குதி என மல்லிகை செடியுடைய அனைத்து பகுதிகளிலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையென ஸ்ப்ரே செய்து வந்தால் மல்லிகை செடி துளிர் விட்டு, பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும்.
இதையும் படிங்க:வீட்டில் கறிவேப்பிலை செடி தளதள வென்று வளரணுமா? 'இந்த' இரண்டையும் வாரத்திற்கு ஒரு முறை தெளிங்க!