ETV Bharat / lifestyle

அரிசியில் வண்டு வராமல் இருக்க 'இந்த' பொருள் போதும்..ஒரு வருடமானலும் பிரஷ்ஷாக இருக்கும்! - TIPS TO STORE RICE

அரிசி பையில் கிராம்பு அல்லது சிவப்பு மிளகாய் போட்டு வைப்பதால், ஒரு வருடமானாலும் வண்டு, புழு வராமல் அரிசி பிரஷ்ஷாக இருக்கும். இதுபோன்ற டிப்ஸைகளை இந்த பதவில் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 18, 2025, 2:41 PM IST

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு முறைகளில் ஒன்றான அரிசியை, அனைவரும் மூட்டை மூட்டையாக அல்ல பெரிய டப்பாகளில் சேமித்து வைத்திருப்பது வழக்கம். ஆனால், சில நேரங்களில், நாம் சேமித்து வைக்கும் அரிசியில் புழு, பூச்சி பிடித்து அரிசியை பயன்படுத்த முடியாத அளவிற்கு கெடுத்து விடுகிறது. இப்படியான சூழ்நிலையில், வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து எப்படி இந்த பூச்சி மற்றும் புழுக்களை அண்ட விடாமல் வைத்திருக்கலாம் என்பதை பார்ப்போம்..

கிராம்பு மற்றும் சிவப்பு மிளகாய்: கிராம்பு மற்றும் சிவப்பு மிளகாய் அரிசியில் வண்டு மற்றும் புழுக்களை வர விடாமல் தடுக்க உதவியாக இருக்கும். இதற்கு கிராம்பு மற்றும் மிளகாயை ஒரு துணியில் சிறியதாக கட்டி அரிசியின் நடுவில் வைத்து விடுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty images)

கட்டி பெருங்காயம்: சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பெருங்காயம், அரிசியில் வண்டு மற்றும் புழு வராமல் இருக்க உதவுகிறது. பெருங்காயத்தின் கடுமையான வாசனை, பூச்சி மற்றும் புழுக்களை தடுக்கிறது. நீங்கள், அரிசியை சேமித்து வைக்கும் டப்பா அல்லது பையில், சிறிது கட்டி பெருங்காயத்தை வையுங்கள். இப்படி செய்வதால், அரிசியில் பூச்சிகள் மட்டுமின்றி, ஈரப்பதத்தால் வரும் பாக்டீரியாக்களும் வராமல் இருக்கும்.

கற்பூரம்: கற்பூரத்தின் வாசனையால், அரிசியில் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வளராது. இதற்கு முதலில் பத்து கற்பூரத்தை சற்று தடிமனான காட்டன் துணியில் கட்டி அரிசி வைத்துள்ள டப்பா அல்லது பையில் வைத்து விடுங்கள். இந்த முறையை பின்பற்றினால், அரிசி எவ்வளவு நாட்களானாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

போரிக் பவுடர்: அரிசியில் புழுக்கள் வளர ஈரப்பதம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில், போரிக் பவுடர் அரிசியிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்ச உதவியாக இருக்கிறது. இதனால் அரிசிக்குள் பூச்சிகள் நுழைவது தடுக்கப்படும். அரிசி பை அல்லது டப்பாவை சுற்றி போரிக் பவுடரை தூவி விடுவது நல்ல பலனை தரும்.

வேப்பிலை: வேப்பிலையில் உள்ள பூச்சிக்கொல்லி பண்புகள் அரிசிக்குள் பூச்சிகள் நுழைவதைத் தடுக்கிறது. இதற்கு, முதலில் சிறிது வேப்பிலையை நன்கு காயவைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து வைக்கவும். பின்னர், அதை ஒரு துணியில் சேர்த்து சிறு உருண்டையாக கட்டி அரிசியின் நடுவில் வைத்தால் அரிசியில் புழு மற்றும் வண்டு வராது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

பிரியாணி இலைகள் : அரிசி பைக்குள் 2 முதல் 3 பிரியாணி இலைகளை போட்டு வைப்பதால், அரிசியில் வண்டு ஏற்படுவதை தடுக்கலாம். அரிசி மட்டுமின்றி வீட்டில் அரைத்த மிளகாய்தூள் போன்ற மசாலா பொருட்களில் வரும் வண்டுகளை தடுக்க, கிராம்பு, கட்டி பெருங்காயம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: சமைக்கும் போது உப்பு அதிகமாயிருச்சா? கவலைப்படாதீங்க..இந்த பொருள் இருந்தா போதும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.