தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

தீபாவளி லேகியம் செய்வது எப்படி? சர்க்கரை முதல் ஜீரணக் கோளாறு வரை ஒரே தீர்வு! - SUGAR CONTROL LEGIYAM

தித்திக்கும் தீபாவளியை இனிப்புகள் இல்லாமல் நம்மால் கடக்க முடியாது, அப்படி பண்டிகை நாட்களில் அளவுக்கு மீறி இனிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று பிரச்சனை மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த தீபாவளி லேகியத்தை செய்து சாப்பிடுங்கள்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 29, 2024, 3:54 PM IST

தீபாவளி பண்டிகை என்றாலே முக்கியமானது, ஒன்று பட்டாசு மற்றொன்று பலகாரம். வீட்டிலேயே செய்த வகைவகையான பலங்காரங்களை சாப்பிட்டு பட்டாசுகளை வெடிப்பது என்பது தனி சுகம் தான். ஆனால், இப்படி ஒரே நாளில் கொழுப்பு, சர்க்கரை, எண்ணெய் என அனைத்தையும் உட்கொள்வதால் வயிற்று உபாதைகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க, பலகாரம் செய்த கையோடு இந்த லேகியத்தையும் செய்து சாப்பிடுங்கள்.

லேகியம் செய்ய தேவையான பொருட்கள்:

  • மல்லி - கால் கப்
  • சித்தரத்தை - 10 கிராம்
  • ஓமம் -1 டேபிள் ஸ்பூன்
  • சுக்கு - 10 கிராம்
  • கிராம்பு - 4
  • சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
  • மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
  • கண்டந்திப்பிலி - 10 கிராம்
  • வெல்லத்தூள் - 100 கிராம்
  • அரிசி திப்பலி - 10 கிராம்
  • தேன் - அரை கப்
  • நெய்- 1 கப்

செய்முறை:

  1. முதலில், கண்டந்திப்பிலி, சித்தரத்தை, சுக்கு, அரிசி திப்பிலி ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும்.
  2. பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வெல்லத்தூள்,நெய்,தேன் இவற்றை தவிர மற்ற எல்லா பொருட்களையும் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர், சூடு ஆறும் வரை தனியாக எடுத்து வைக்கவும்.
  3. சூடு முழுமையாக ஆறியதும் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 2 கப் தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள்.
  4. இப்போது, இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அறைத்துக்கொள்ளுங்கள். அறைத்து வைத்த கலவையை குழம்பு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நாம் இடித்து வைத்த பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  5. பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, நாம் அரைத்து வைத்துள்ள கலவயை ஊற்றி அடிபற்ற விடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருங்கள்.
  6. தண்ணீர் சுண்டியதும் அதில் வெல்லத்தூள் போட்டு கைவிடாமல் கரண்டியால் கிளறி விடுங்கள்.
  7. பின், அந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறுங்கள். நன்றாக சுண்டக்காய்ச்சியதுடன் அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கிவிட்டால் தீபாவளி லேகியம் ரெடி. (குறிப்பு: லேகியம் அடிப்பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கு சற்று கனமான பாத்திரத்தை உபயோகிக்கவும்).

இப்படியும் செய்யலாம்:தீபாவளி லேகியம் செய்ய முடியாதவர்கள் தலா ஒரு டஸ்பூன் ஓமம், சுக்கு, வெல்லம் எடுத்து பொடியாக்கி கொள்ளவும். அதில் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று பிரச்சனை எதுவும் வராது.

பயன்கள் என்னென்ன?: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் வயிற்று உப்புசம், திடீர் ஏப்பங்கள், வாந்தி,அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, அசதி ஆகியவற்றிற்கு மருந்தாக இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

இதையும் படிங்க:

தீபாவளி எண்ணெய் குளியல்..காய்ச்சும் முறையும் பயன்படுத்தும் முறையும் இப்படி தான்!

மொறு மொறு தேங்காய் பால் முறுக்கை இந்த தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்...ரெசிபி இதோ!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details