தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

டீ கடை கஜடா/முட்டைகோஸ் கேக் செய்வோமா? 1 மாதம் வச்சு சாப்பிடலாம்! - TEA KADAI KAJADA

டீக்கடையில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலேயே எப்படி எளிமையாக கஜடா செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 26, 2024, 4:48 PM IST

டீக்கடையில் மட்டும் கிடைக்கும் ஸ்நாக்ஸான கஜடாவை உண்டு மகிழாதவர்கள் யாரேனும் இருப்பார்களா? முட்டைகோஸ், வெட்டு கேக், கஜடா என ஒவ்வொரு பகுதியிலும் இதனை வெவ்வேறு பெயர்களால் அழைக்கின்றனர். வெளிப்பகுதி மொறு மொறுப்பாகவும், உள்பகுதி மென்மையாகவும் இருக்கும் கஜடாவை வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  • சர்க்கரை - 1 கப் (100 கிராம்)
  • முட்டை - 1
  • ரவை - 2 டேபிள் ஸ்பூன்
  • நெய் - 1 டீஸ்பூன்
  • பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு

கஜடா செய்முறை:

  • ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சர்க்கரை சேர்த்து நைசாக அரைக்கவும். பின்னர், அதனுடன் முட்டை சேர்த்து நைசாக அரைத்து ஒரு அகல பாத்திரத்திற்கு மாற்றவும்.
  • இப்போது இந்த கலவையில் 3 டீஸ்பூன் தண்ணீர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்ததாக, ரவை மற்றும் நெய் சேர்த்து மீண்டும் கலந்து விடவும். பின்னர், மைதா மாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து மூடி போட்டு ஊற வைத்து விடுங்கள். (ரொம்ப கெட்டியாகவும் தண்ணீயாகவும் இல்லாமல் இருப்பதே சரியான பதம்)
  • அரை மணி நேரத்திற்கு பின், கையில் கொஞ்சமாக நெய் தடவி, எலுமிச்சை பழ அளவிற்கு மாவை உருண்டைகளாக உருட்டவும். இதற்கிடையில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து உருண்டைகள் மூழ்கிற அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • பின்னர், அதில் நாம் உருட்டி வைத்த மாவை சேர்த்து, மேல் பாகத்தில் விரிசல் விட்டு வந்ததும், திருப்பி விடவும். மறுபக்கத்திலும் விரிசல் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்தால் டீ கடை ஸ்டைல் கஜடா ரெடி. புத்தாண்டிற்கு இதை வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள்.

ABOUT THE AUTHOR

...view details