தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

அனைவரின் மனம் கவர்ந்த 'பில்டர் காபி'..பக்குவமாய் இப்படி போடுங்க! - FILTER COFFEE

உலக புகழ்பெற்ற மற்றும் அனைவருக்கும் மிகவும் பிடித்த பில்டர் காபி பக்குவமாய் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty images)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 17, 2025, 7:34 PM IST

'காலை எழுந்ததும், காபி குடிக்கவில்லை என்றால், அந்த நாளே ஓடாது' என பலர் சொல்லி கேட்டிருப்போம். இதற்கு காரணம், காபியின் மனமும் அதன் சுவையும் தான். அதிலும், பில்டர் காபி என்றால் சொல்லவா வேண்டும்?..அப்பப்பா, ஒரு மடக்கு குடித்ததும், உடம்பில் ஏற்படும் புத்துணர்ச்சியை வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க முடியாது, அனுபவித்தால் தான் புரியும். அந்த வகையில், 'காபி இஸ் ஆஃ வேர்டு, பில்டர் காபி இஸ் ஆ எமோஷன்' என தைரியமாக சொல்லலாம். இப்படி, பலருக்கும் விருப்பமான பில்டர் காபியை, காபி பில்டர் பயன்படுத்தி வீட்டிலேயே எப்படி போடுவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • பால் - 3 கிளாஸ்
  • பில்டர் காபி தூள் - 3 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை/ நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
  • தண்ணீர் - 1 கிளாஸ்

செய்முறை:

  • முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
  • இதற்கிடையில், காபி பில்டரில் உள்ள மேல் குவளையில், காபி தூள் சேர்த்து, பில்டரில் கொடுக்கப்பட்டுள்ள சல்லடை போல் இருக்கும் தட்டை வைத்து அழுத்தம் கொடுக்கவும். பின்னர், கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி பில்டரை மூடி விடுங்கள். 10 முதல் 15 நிமிடங்களில் அருமையான டிக்காஷன் தயாராகிவிடும்.
  • இப்போது, அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்து பால் ஊற்றி கொதிக்கவிடுங்கள். பின்னர், ஒரு கிளாஸில் 2 டீஸ்பூன் டிக்காஷன், சர்க்கரை மற்றும் சூடான பால் சேர்த்து பக்குவாய் நுரைபொங்க ஆற்றினால் வீடே மணக்கும் பில்டர் காபி ரெடி..

ABOUT THE AUTHOR

...view details