தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

தீபாவளி ஸ்பெஷல் காஜு கத்லி..10 நிமிடம் போதும்!

வெறும் முந்திரி, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து 10 நிமிடங்களில் தயார் செய்யப்படும் காஜு கத்லியை இந்த தீபாவளிக்கு செய்து சாப்பிடுங்கள்..ரெசிபி இதோ..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 25, 2024, 3:44 PM IST

தீபத் திருநாளான தீபாவளியை புத்தாடைகள், தீபங்கள், பலகாரத்துடன் வரவேற்க அனைவரும் தயாராகி வரும் நிலையில், அனைவருக்கும் பிடித்தமான ஒரு புது ரெசிபியுடன் உங்களை சந்திக்க நாங்கள் வந்துள்ளோம். அது தான் காஜு கத்லி. வெறும் முந்திரி, தண்ணீர் மற்றும் சர்க்கரை மட்டுமே வைத்து செய்யக்கூடிய இந்த முந்திரி பர்பி எனப்படு காஜு கத்லியை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்:

  • முந்திரி பருப்பு - 2 கப்
  • சர்க்கரை - 1 1/2 கப்
  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 3/4 கப்
  • சில்வர் பேப்பர் (silver vark) - தேவையான அளவு

செய்முறை:

  1. முதலில், முந்திரிப்பருப்பை நன்கு அரைத்து பெளடர் செய்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள் (முந்திரியை அதிகமாக அரைத்தால் எண்ணெய் வெளியேற தொடங்கி விடும். அதனால், பக்குவமாக அரைக்க வேண்டும்)
  2. இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைக்கவும். பாத்திரம் சூடானதும் 1 1/2 கப் சர்க்கரையை சேர்த்து பின்னர், சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும்.
  3. ஒரு கம்பி பதத்திற்கு பாகு வந்ததும், அரைத்து வைத்த முந்திரிப்பருப்புத் தூளைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிண்டவும் (முந்திரிப்பருப்பு தூளின் நிறம் மாறக்கூடாது)
  4. இப்போது சர்க்கரை பாகுடன் நன்கு கலந்ததும், நெய் சேர்த்து மீண்டும் கிளறவும். மாவின் பதம் சப்பாத்தி மாவின் பதத்தைக் காட்டிலும் சற்று திக்காக வரும் போது அடுப்பை அணைத்து விடுங்கள்
  5. இப்போது ஒரு தட்டில் நெய் தடவி, நாம் செய்து வைத்த கலவையை சேர்க்கவும். இது சிறிது ஆறி கை பொறுக்கும் சூடு வந்ததும் தட்டு முழுவதும் சப்பாத்தி கட்டையால் நன்றாக பரப்பி விடுங்கள்.
  6. பின்னர் இதன் மீது, சில்வர் ஃபாயில் பேப்பரை ஒட்டி டைமண்ட் ஷேப்பில் கட் செய்தால் சுவையான காஜு கத்லி தயார். இந்த தீபாவளிக்கு இதை செய்து சுவைத்து மகிழுங்கள்..

ABOUT THE AUTHOR

...view details