ETV Bharat / lifestyle

தமிழகத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 இடங்கள்? வியக்க வைக்கும் பாரம்பரிய இடங்களை தெரிஞ்சுக்கோங்க! - HERITAGE SITES IN TAMILNADU

தமிழகத்தில் உள்ள பாரம்பரிய இடங்களும் அதன் சிறப்புகளும் உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறதா? ஆம், என்றால் இந்த பதிவின் மூலம் வரலாற்றை தெரிந்து பயன்பெறுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - TamilNadu Tourism website)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 20, 2024, 5:15 PM IST

சுற்றுலா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. கல்வி சுற்றுலா, பக்தி சுற்றுலா, இன்பச் சுற்றுலா போன்ற பல வகை உண்டு. அதில் ஒன்று தான் பாரம்பரிய சுற்றுலா. நம்மை சுற்றி இருக்கும் பாரம்பரியமிக்க இடங்களை சென்று பார்ப்பதே இந்த பாரம்பரிய சுற்றுலா. ஆண்டுதோறும் நவ.19 முதல் நவ.25ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. அப்படி நாம் இருக்கும் இந்த தமிழகத்திலே நம்மை சுற்றி பல பாரம்பரிய சுற்றுலா தளங்கள் உள்ளது. அவற்றை பற்றியும் அந்த இடங்களின் பாரம்பரியத்தை இதில் காண்போம்.

ஐராவடேஸ்வரா கோயில்(Airavatesvara temple): இரண்டாம் ராஜராஜ சோழனால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில், 'சிற்பிகளின் கனவு' என போற்றப்படுகிறது. ஆலயத்தின் முகப்பு தொடங்கி இண்டு இடுக்கு வரை, விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழங்கை என அனைத்து அளவிலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிறபங்களை கொண்டுள்ளது.

Airavatesvara temple
Airavatesvara temple (Credits - Getty Images)

அழகும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த கோயில், யுனெஸ்கோவால் 2004ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. யானையின் உடலை மறைத்தால் காளையின் உருவமும், காளையின் உடலை மறைத்தால் யானையின் உருவம் தெரியும் வகையில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் உலக பிரசித்திப்பெற்றது.

உலக புகழ்பெற்ற ஏழு ஸ்வரங்களை இசைக்கும் இன்னிசை படிகளும் இங்கு தான் உள்ளது. எங்கு நோக்கினும் அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் புதைத்து வைத்துள்ள இந்த கோயிலை காணக் கண் கோடி வேண்டும் என்றால் மிகையில்லை. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் தாராசுரம் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவிலும் இருக்கிறது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்.

நீலகிரி மலை ரயில் (The Nilgiri Mountain Railway): மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் இடையே உள்ள வளைவு நெளிவான பாதையில் செய்யும் இந்த இரயில் சவாரி த்ரிலிங் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சியை தரும். இந்த ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு ஊட்டியில் முடிகிறது. ஆங்கிலேயர்களால், 1908ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இரயில்தான் இந்தியாவில் தற்போது இயங்கும் ஒரே ரேக் ரயில்.

The Nilgiri Mountain Railway
The Nilgiri Mountain Railway (Credit - TamilNadu Tourism website)

இயற்கையின் ரம்மிய காட்சிகளை தடதட எனும் ரயிலின் தாலாட்டில் கண்டு ரசிக்கும் அனுபவத்தை ஒரு முறையாவது பெற்று விடுங்கள். 2005ல், நீலகிரி மலை இரயில் பாதையை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. இந்த ரயில், பொம்மை ரயில் (Toy Train) என அழைக்கப்படுகிறது.

கங்கை கொண்ட சோழப்புரம் (Gangaikonda cholapuram): முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை நதி வரை படையெடுத்துச் சென்று, வடக்கே உள்ள அரசர்களை வென்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை கட்டியுள்ளார். இது அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. இதனுடன், பிரமாண்டமான ஒரு சிவன் கோயிலையும் சோழன் கட்டியுள்ளார்.

Gangaikonda cholapuram
Gangaikonda cholapuram (Credits - Getty Images)

யுனெஸ்கோ, இந்த கோயிலை உலக பாரம்பரிய தளங்களில் சேர்த்துள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கத்தை விட இக்கோயிலில் லிங்கம் பெரியது. தென்னிந்தியாவில் உள்ள சோழர் காலத்து சிற்பங்களின் களஞ்சியம் தான் கங்கைகொண்ட சோழபுரம் கோயில். இந்த கோயிலில் கருவறையச சுற்றி ஐந்து சிறிய கோயில்களும், கருவறை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில், சந்திரகாந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது.

Mammallapuram
Mammallapuram (Credits - Getty Images)

மாமல்லப்புரம் (Mammallapuram Shore): வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரத்திற்குச் செல்லாமல் தமிழ்நாட்டுக்கான எந்தப் பயணமும் நிறைவடையாது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து இந்த இடத்தை பார்க்க மக்கள் குவிகின்றனர். பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள், பஞ்ச ரதம், பஞ்ச பாண்டவர் குகைக் கோயில், என மகாபலிபுரம் வைத்துள்ள அற்புதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். பல்லவ வம்சத்தின் மகத்துவத்தை அனுபவிக்க மகாபலிபுரத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

Brihadeeswara temple
Brihadeeswara temple (Credits - Getty Images)

பிரிஹதீஸ்வரர் கோயில் (Brihadeeswara temple): வீட்டில், ஆன்மிக சுற்றுலாவிற்கு பிளான் செய்தால் அதில், தஞ்சாவூரில் உள்ள பிரிஹதீஸ்வரர் கோயில் இல்லாமல் கடந்து செல்வது கடினம். இது தஞ்சை பெரிய கோயில் என்றும் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில், வழிபாட்டுத் தலங்களை தாண்டி கட்டிடக்கலைக்கு உலக புகழ் பெற்றது. இந்த கோயிலின் கருவறை முழுவதும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது என்றால் நம்பமுடிகிறதா? சோழர் காலத்து கட்டிடக்கலையை காணவேண்டும் என்றால் பிரிஹதீஸ்வரர் கோயிலுக்கு செல்லுங்கள்.

இதையும் படிங்க:

டிசம்பரில் கேரளாவுக்கு போறீங்களா? அப்படியே, இந்த 5 இடங்களுக்கு ஒரு விசிட் போடுங்க!

தமிழ்நாட்டுல இருந்துட்டு இந்த 6 இடங்களுக்கு போகலைனா எப்படி? கட்டாயம் மிஸ் பண்ணக்கூடாது!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.