ETV Bharat / lifestyle

காரசாரமான பூண்டு குழம்பு இப்படி செய்ங்க...ஒரு வாரமானாலும் கெடாமல் இருக்கும்! - POONDU PULI KUZHAMBU

7 நாள் ஆனாலும் கெடாமல், சுவை மாறாமல் இருக்கக்கூடிய இந்த பூண்டு குழம்பை ஒரு முறை உங்கள் வீட்டிலும் செய்து பாருங்க. ரெசிபி இதோ!

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 23, 2024, 7:13 PM IST

என்ன தான் வகைவகையான குழம்பு வைத்தாலும், வீட்டில் பூண்டு குழம்பு என்றால் போதும், சோறு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே உள்ளே இறங்கும். அப்படி, பலருக்கும் பிடித்த பூண்டு குழம்பை சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..இந்த குழம்பை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் 7 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணிப்பாருங்க!

மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:

  • பூண்டு பல் - 7 முதல் 10
  • சின்ன வெங்காயம் - 5
  • தக்காளி - 1
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • வெந்தயம் - 3/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்

குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் - 15
  • பூண்டு - 15
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • புளி - 1 நெல்லிக்காய் அளவு
  • நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம் - 3/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை- 1 கொத்து

பூண்டு குழம்பு செய்முறை:

  1. குழம்பிற்கான மசாலா அரைப்பதற்கு முதலில் அடுப்பில், ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர், பூண்டு, சீரகம், மிளகு, வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. அனைத்தும் நன்கு வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆறவைக்கவும். இப்போது, மிக்ஸி ஜாரில் இந்த கலவையை சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து நைசாக அரைத்து தனியாக வைக்கவும். (தேவைப்பட்டால் மட்டும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்)
  3. இப்போது, அதே வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடாணதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்க்கவும். அடுத்ததாக, நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.(பெரிய வெங்காயமாக இருந்தால், பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்)
  4. அடுத்ததாக, தோல் உரித்த பூண்டை சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து வதக்கவும். பின்னர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. இப்போது, நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும். பின், நாம் கரைத்து வைத்த புளி தண்ணீரை சேர்த்து மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து அடுப்பை அணைத்தால் காரசாரமான பூண்டு குழம்பு தயார்.

இதையும் படிங்க:

வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ இந்த அப்பள குழம்பை ஒருமுறை செய்து பாருங்க..ருசி அப்படி இருக்கும்!

இட்லி,தோசை,சப்பாத்திக்கு அம்சமா இருக்கும் 'பூண்டு தொக்கு'..இப்படி செய்தால் 10 நாள் ஆனாலும் கெடாது!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.