ETV Bharat / state

காணும் பொங்கல் கொண்டாட்டம்.. பாரம்பரிய நடனமாடி கொண்டாடிய மலைவாழ் மக்கள்! - KAANUM PONGAL CELEBRATION

கோயம்புத்தூரில் காணும் பொங்கலை முன்னிட்டு மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

பொங்கல் கொண்டாடிய மலைவாழ் மக்கள்
பொங்கல் கொண்டாடிய மலைவாழ் மக்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2025, 11:07 PM IST

கோயம்புத்தூர்: பொங்கல் பண்டிகைகளில் இறுதி பண்டிகையான காணும் பொங்கல் இன்று (ஜனவரி 16) வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக விளங்கும் கோவை குற்றாலத்தில், காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்து குற்றால அருவியில் நீராடி மகிழ்ந்துள்ளனர்.

பாரம்பரிய நடனமாடி பொங்கல் கொண்டாடிய மலைவாழ் மக்கள் (ETV Bharat Tamil Nadu)

இதற்கிடையில், காணும் பொங்கலை முன்னிட்டு, சாடிவயல் அடுத்த சிங்கப்பதி மலைவாழ் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து இயற்கையை வணங்கியுள்ளனர். இவ்விழாவிற்கு திமுக மாநில செயற்குழு உறுப்பினர் தணிக்கை ஏர்போர்ட் ராஜேந்திரன் தலைமை வகித்துள்ளார்.

குற்றாலத்தில் நீராடி மகிழ்ந்த மக்கள்
குற்றாலத்தில் நீராடி மகிழ்ந்த மக்கள் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் களைகட்டிய எருது விடும் விழா.. களத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்!

இதில், மலைவாழ் கிராம மக்கள் அனைவரும் 150 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து, அவர்களின் பாரம்பரிய இசையுடன் நடனமாடி மகிழ்ந்துள்ளனர். இவர்களுடன் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் தணிக்கை ஏர்போர்ட் ராஜேந்திரனும் மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய நடனமாடியுள்ளார். இது மலைவாழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ஏர்போர்ட் ராஜேந்திரன்
மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ஏர்போர்ட் ராஜேந்திரன் (ETV Bharat Tamil Nadu)

சாடிவயல் பகுதியில் காணும் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், கோவை மாநகருக்குள் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழும் ஸ்மார்ட் சிட்டி குளக்கரைகள் மக்கள் கூட்டமின்றி வெரிச்சோடி காணப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.