ETV Bharat / state

"நாளை நமதே இந்த நாடும் நமதே" - ஜானகி நூற்றாண்டு விழாவில் தோன்றி பேசிய எம்.ஜி.ஆர்! - MGR SPEECH THROUGH AI

எனது மனைவியின் நூறாவது பிறந்தநாளுக்கு அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழா எடுத்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தோன்றிய எம்.ஜி.ஆர் பேசினார்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தோன்றிய எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள்
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தோன்றிய எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள் (Credits - AIADMK IT WING X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 9:06 PM IST

சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், எம்.ஜி.ஆரின் மனைவியுமான மறைந்த ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஜானகியின் வாழ்க்கை தொடர்பான குறும்படம், கவியரங்கம், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

மேலும், இவ்விழாவில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக எம்.ஜி.ஆர் பேசும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. அதில், "வணக்கம். எல்லோரும் நல்லா இருக்கீங்களா. நான் இப்போதும் உங்களுடன் தான் இருக்கிறேன். உங்கள் இதயத்தில் தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். எனது மனைவி ஜானகி அதிமுகவிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதையும் படிங்க : "அரசியல் சரிபட்டு வராது என துணிந்து முடிவெடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன்" - நூற்றாண்டு விழாவில் ரஜினி புகழாரம்!

எனது மனைவியின் நூறாவது பிறந்தநாளுக்கு அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழா எடுத்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. குறிப்பாக, என்னுடைய அன்புத்தம்பி எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய நேர்மையான பொதுவாழ் வாழும், உழைப்பாலும், விசுவாசத்தாலும் கட்சியின் பொதுச் செயலாளராக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தைரியத்தோடும், சிறப்போடும் பொன்மனச் செல்வி ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டார். அதேபோல் தம்பி பழனிசாமி நீங்களும் சிறப்பாக செயல்படுகின்றீர்கள். கட்சிக்கு விசுவாசமான தொண்டர் படை எப்போதும் உங்களுடன் இருக்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

நான் ஆரம்பித்த இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு தேர்தல் வந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை பெற்றுத்தருவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். அனைவருக்கும் எனது ஆசைகள். நாளை நமதே இந்த நாடும் நமதே வாழ்க அண்ணா நாமம்" என ஏ.ஐ மூலம் எம்.ஜி.ஆர் இந்நிகழ்வில் பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.