ETV Bharat / state

சென்னை மாநகராட்சி அலுவலகங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி மட்டும் இவ்வளவு கோடியா? - ஆர்டிஐ-யில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாடு மின்வாரியத்தின் சென்னை அண்ணா சாலை கோட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் செலுத்த வேண்டிய மொத்த மின் கட்டண நிலுவைத் தொகை ரூ.1,146.54 கோடி என்று ஆர்டிஐ கேள்விக்கு மின் வாரியம் பதிலளித்துள்ளது.

எம்.ஜி.மோகன் ஆர்டிஐ மூலம் கேள்வி
எம்.ஜி.மோகன் ஆர்டிஐ மூலம் கேள்வி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை : மதுரையை சேர்ந்த 'இந்தியன் குரல்' என்ற அமைப்பின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆர்.டி.ஐ ஆர்வலருமான என்.ஜி.மோகன், 'சென்னையில் உள்ள அரசு தலைமை செயலகம், சட்டமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி ஆகிய இடங்களில் இருக்கும் மொத்த மின் இணைப்புக்களின் எண்ணிக்கையை தனி தனியாக தர வேண்டுகிறேன்.

மேற்படி இடங்களில் உள்ள தமிழக அரசு அலுவலங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் மின் இணைப்புக்களுக்கு கட்ட வேண்டிய மொத்த மின் கட்டண பாக்கியையும் தனி தனியாக தர வேண்டுகிறேன். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலக மின் கட்டண பாக்கியாக துறை ரீதியாக மொத்தம் எவ்வளவு உள்ளது என்ற அறிக்கையின் ஒளி நகல் தர வேண்டுகிறேன்' என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆர்டிஐ பதில்
ஆர்டிஐ பதில் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்கு அண்ணா சாலை கோட்ட மின்வாரிய அலுவலக நிர்வாகம் அளித்துள்ள பதிலில், 'அண்ணாசாலை கோட்டத்திற்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி அலுவலகங்களின் மின் இணைப்பிற்கான நிலுவைத் தொகை ரூ. 677.96 கோடி என்றும், இந்த கோட்டத்திற்கு உட்பட்ட தமிழக அரசு துறை சார்ந்த மின் இணைப்பிற்கு உண்டான நிலுவைத் தொகை ரூ.468.58 கோடி' எனவும் தில் அளித்துள்ளது.

இதையும் படிங்க : "தமிழகத்துக்கு தர வேண்டிய அனைத்து நிதியையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது" சபாநாயகர் அப்பாவு பகிரங்க குற்றச்சாட்டு!

இதுகுறித்து 'இந்தியன் குரல்' அமைப்பின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஜி மோகன் கூறுகையில், "மேற்கண்ட ஆர்டிஐ தகவல் சாம்பிள் மட்டுமே. பானை சோற்றுக்கு ஒரு பருக்கைச் சோறு பதம். இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் எவ்வளவு மின் கட்டண நிலுவையை வைத்திருப்பார்கள் என்பதை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம்.

அரசு அலுவலகங்களும், நிறுவனங்களுமே இதுபோன்று பொறுப்பற்ற வகையில் இயங்கினால் இந்த கட்டண சுமை பொதுமக்கள் தலையில் தானே வந்து விழும். தமிழக மின்வாரியம் நஷ்டத்தில் தானே இயங்கும். சாதாரண குடிமக்கள் ஒரு நாள் தாமதமாக கட்டணம் செலுத்த தவறினால் உடனடியாக அபராதம் போட்டு, மின் இணைப்பை துண்டித்து அவர்களை வதைக்கும் மின்வாரியம் அரசு அலுவலகங்களை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. ஆகையால், தமிழக அரசு உடனடியாக மின் வாரியத்திற்கு கட்ட வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.