சென்னை: நடிகை த்ரிஷாவின் வளர்ப்பு நாய் சாரோ (Zorro) இன்று (டிச.25) உயிரிழந்தது. தென்னிந்திய சினிமாவில் கிட்டதட்ட 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 1999ஆம் ஆண்டு வெளியான ’ஜோடி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ’மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்தார். பின்னர் சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, திருப்பாச்சி, ஆறு, சம்திங் சம்திங், கிரீடம், பீமா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பிரபல நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நடிகை த்ரிஷா தனது வளர்ப்பு நாய் சோரோ உயிரிழந்துவிட்டதாக சோகத்துடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
— Trish (@trishtrashers) December 25, 2024
அவரது பதிவில், “எனது மகன் சோரோ (Zorro) கிறிஸ்துமஸ் தினமான இன்று காலை உயிரிழந்து விட்டான். இதற்கு பிறகு எனது வாழ்வில் எந்த அர்த்தமும் இல்லை என்பது என்னை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். நானும், எனது குடும்பத்தினரும் பெரும் மனமுடைந்து இருக்கிறோம். நான் எனது வேலையிலிருந்து சில காலம் ஓய்வு எடுக்க உள்ளேன்” என கூறியுள்ளார்.
Zorro🪽
— Trish (@trishtrashers) December 25, 2024
2012-2024🌈 pic.twitter.com/9JHOB3RFNp
மேலும் த்ரிஷா மகனாக கருதும் வளர்ப்பு நாய் சோரோவின் இறுதிச்சடங்கு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். முன்னதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பலமுறை தனது வளர்ப்பு நாய் புகைப்படங்களை த்ரிஷா வெளியிட்டுள்ளார். த்ரிஷா அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அன்று ’சர்கார்’ போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை; இன்று மகளின் படத்தை வாழ்த்திய விஜய்! - VIJAY WISHED ALANGU MOVIE
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்', ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்த்தில் சூர்யா நடிக்கும் படம், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா' திரைப்படம், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ராம்’, டொவினோ தாம்ஸ் நடிக்கும் 'Identity' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.