தீபத் திருநாளான தீபாவளியை வரவேற்க அனைவரும் வீட்டில் உள்ள பூஜை பாத்திரங்களை பளபளப்பாக்கும் வேலையில் மும்முரமாக இருப்பார்கள். பூஜை பாத்திரத்தில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கை போக்குவது ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் எவ்வளவு அழுத்தி தேய்த்தாலும் விளக்கு பொழிவிழந்து காணப்படும்.
இப்படியான சூழ்நிலையில் தான், எளிதாக எப்படி பூஜை பாத்திரங்களை கழுவுவது? புதியது போல பூஜை பாத்திரங்கள் பளபளப்பாக்க என்ன செய்ய வேண்டும்? என்பதற்காக ஈஸியான டிப்ஸ்களை கொண்டு வந்திருக்கிறோம். ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
புளி விழுது - 2 டீஸ்பூன்
பூஜை பாத்திரங்களை கழுவுவது எப்படி?:
- முதலில், ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு,உப்பு மற்றும் தண்ணீரில் ஊற வைத்த புளி விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்
- இப்போது, பூஜை பாத்திரத்தில் இருக்கும் எண்ணெய்யை டிஸ்யூ பேப்பரால் துடைக்கவும். அதே போல, பாத்திரத்தில் இருக்கும் சந்தனம் மற்றும் குங்குமத்தை தண்ணீரல் கழுவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
- பின்னர், தேங்காய் நாரை பயன்படுத்தி நாம் கலந்து வைத்துள்ள கலவையை பாத்திரத்தின் அனைத்து பகுதிகளிலும் படுவது போல நன்றாக தேய்த்து விடுங்கள்.
- பிறகு, தண்ணீரால் இந்த பாத்திரங்களை கழுவிய பின்னர், காட்டன் துணியை பயன்படுத்தி பாத்திரத்தில் இருக்கும் ஈரத்தை துடைத்து விடுங்கள்.