தென்னிந்திய உணவில் ரசத்திற்கு என ஒரு நீங்கா இடம் அன்று தொட்டு இன்று வரை உள்ளது. இது ஒரு சூப் வகையை சார்ந்தது என்றாலும், அனைவரும் இதை சாதத்தில் ஊற்றி சாப்பிடுவதையை வழக்கமாக வைத்துள்ளனர். அதுவே, பலரது இஷ்ட உணவாகவும் இருக்கிறது. ரசத்தில் பல வகை இருந்தாலும், இப்போது இருக்கும் குளிர்காலத்திற்கு ஏற்றது மிளகு ரசம் தான். அப்படிப்பட்ட மிளகு ரசத்தை பக்குவமாக எப்படி வைப்பது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- மிளகு - 2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பூண்டு பல் - 2
- பழுத்த தக்காளி- 2
- புளி - 1 நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு ரசம் செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் சேர்த்து நைசாக அரைக்கவும். அதனுடன் பூண்டை தட்டி வைக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைக்கவும்.
- அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் பழுத்த தக்காளி பழங்களை சேர்த்து கைகளால் மசித்து விடுங்கள். இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடனதும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும். அதனுடன் பெருங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நாம் அரைத்து வைத்த மிளகு சீரகம், பூண்டை இடித்து சேர்த்து வதக்கவும்.
- மசாலா மனம் வந்ததும், கரைத்து வைத்த தக்காளி சேர்த்து வதக்கிய பின், கரைத்து வைத்த புளி தண்ணீர் சேருங்கள். இப்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.
- ரசம் நுரை கட்டி வரும் வரை அப்படியே விட்டு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழைகளை தூவினால், குளிர்காலத்திற்கு இதமான மிளகு ரசம் தயார்.
இதையும் படிங்க:
மூட்டு வலிக்கு தீர்வு தரும் ஆட்டுக்கால் சூப்...இப்படி செய்ங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!
காரசாரமான பூண்டு குழம்பு இப்படி செய்ங்க...ஒரு வாரமானாலும் கெடாமல் இருக்கும்!
குளிர்காலத்திற்கு இதமான மிளகு குழம்பு..வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சளி, இருமல் பிரச்சனை வராது!