ETV Bharat / lifestyle

'சீம்பால்' நினைவிருக்கா? சுவையாக எப்படி செய்வது என தெரியுமா? வாங்க பார்க்கலாம்!

சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தடுப்பதில் தொடங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை சீம்பாலில் உள்ள நன்மைகளையும், அதை முறையாக எப்படி செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETVBharat Tamil Nadu)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : 20 hours ago

சீம்பால் பற்றி கேள்விப்படாமல் பலரும் இளம் வயதை கடந்திருக்க முடியாது. கன்று ஈன்ற பசுமாட்டில் முதல் மூன்று நாட்களுக்கு உற்பத்தியாகும் பால் தான் 'சீம்பால்'. இளம் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் சீம்பாலின் சுவைக்காக, மாடு எப்போது கன்று ஈனும், எப்போது சீம்பால் கிடைக்கும் என இன்றளவும் பல சீம்பால் பிரியர்கள் காத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி, சீம்பாலில் என்ன தான் இருக்கிறது? அதை சுவையாக எப்படி செய்வது? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  • சீம்பால் - 1/2 லிட்டர்
  • சர்க்கரை/ நாட்டு சர்க்கரை - 400 கிராம்
  • சுக்கு - 1 சின்ன துண்டு
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் - 2

சீம்பால் செய்முறை:

  • முதலில், சீம்பால் இருக்கும் பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும். (சர்க்கரை நன்கு கரையவில்லை என்றால், வேக வைக்கும் போது சர்க்கரை முழுவதும் அடியில் தங்கிவிடும்).
  • அதேபோல, சுக்கு, மிளகு மற்றும் ஏலக்காயை பொடியாக அரைத்து, பாலில் சேர்த்து கலக்கவும்.
  • இப்போது, இட்லி பாத்திரத்தில் 1/4 பங்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து, பால் பாத்திரத்தை மூடி உள்ளே வைக்கவும்.
  • பின்னர், இட்லி பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 20 முதல் 25 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். 20 நிமிடங்களுக்கு பிறகு, குச்சி அல்லது கத்தி கொண்டு பாலை குத்தி பார்க்க வேண்டும்.
  • கத்தியில் பால் ஒட்டாமல் வரும் போது, அடுப்பை அணைத்து 1 மணி நேரம் வரை ஆற வைக்கவும். அதன் பின், பாத்திரத்தில் இருப்பதை தட்டிற்கு மாற்றி துண்டுகள் போட்டால் சத்து நிறைந்த சீம்பால் தயார்.
இதையும் படிங்க: பால் திரியாமல் 'கருப்பட்டி டீ' போடுவது எப்படி? சிம்பிளான 4 ஸ்டெப் இதோ!

காய்ச்சும் முறை: சீம்பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கவும். இப்போது, அடுப்பில் பால் இருக்கும் பாத்திரத்தை வைத்து, 15 நிமிடங்களுக்கு நன்கு கிளறி விடவும். பால் திரிவது போல் வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற வைத்து சாப்பிடவும். இந்த பாலில், டீ, காபி போட ஏற்றதாக இருக்காது.

சீம்பால் நன்மைகள்:

  1. பசும் பாலை விட, சீம்பாலில் 10 முதல் 15 சதவீதம் சத்துக்கள் அதிகமாக இருக்கும்.
  2. சீம்பாலில் அதிகளவு இம்யூனோகுளோபுலின்கள் (immunoglobulins), ஆண்டிமைக்ரோபியல் பெப்டைடுகள் (antimicrobial peptides)பண்புகள் உள்ளதாக அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் (NIH) தெரிவித்துள்ளது.
  3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
  4. மலச்சிக்கலை சரியாக்கும்
  5. கால்சியல் குறைபாட்டால் வரும் மூட்டு வலி, மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கும்
  6. சருமம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்
  7. தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்களை சீம்பால் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:

சப்பாத்தி பஞ்சு போல் உப்பி வர வேண்டுமா? இந்த 'பழத்தை' கோதுமை மாவுடன் பிசைந்து பாருங்கள்!

பஞ்சு போன்ற இட்லிக்கு அரை கப் 'இதையும்' ஊற வைத்து அரைங்க..புசுபுசு இட்லிக்கு நாங்க கேரண்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.