ETV Bharat / lifestyle

குளிர்காலத்தில் பொடுகு தொல்லை அதிகரித்து முடி கொட்டுகிறதா? இந்த ஹேர் மாஸ்குகளை ட்ரை பண்ணுங்க! - HAIR MASKS FOR DANDRUFF

முக்கியமான தலைமுடிப் பிரச்சினையாக இருக்கும் பொடுகுத் தொல்லையை, வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி எப்படி எளிமையாக நீக்கலாம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 1, 2024, 4:47 PM IST

குளிர் மற்றும் மழைக்காலங்களில், வெப்பநிலை குறைந்து ஜில்லென்ற சூழல் நிழவுவதால் உச்சந்தலையில் அரிப்பு, வறட்சி, பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு பிரச்சனை முடி உதிர்வை ஏற்படுத்தும். நீங்களும் இப்போது, பொடுகு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இந்த இயற்கையான 4 ஹேர் மாஸ்குகளை ட்ரை பண்ணி பொடுகை விரட்டுங்கள்.

தயிர் மற்றும் தேன்: உச்சந்தலையில் உள்ள நுண்ணுயிரியை பராமரிப்பதில் தயிரில் உள்ள புரோபயாடிக் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிர் மற்றும் தேன் கலவையை உச்சந்தலை முதல் அனைத்து முடிகளிலும் தடவி, 20 நிமிடங்களுக்கு பின் தலைக்கு குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும். தேன், முடியில் ஏற்படும் வறட்சியை நீக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

வெந்தயம்: ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக இருக்கும் வெந்தயம் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள், வெந்தயந்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். பின், இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் நன்கு படுமாறு தடவி அரை மணி நேரத்திற்கு பின் குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், வறட்சி, அரிப்பு குறைந்து பொடுகு தொல்லை நீங்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

தேங்காய் எண்ணெய் + எலுமிச்சை: எலுமிச்சை மற்றும் தேய்காய் எண்ணெய் மாஸ்க், பொடுகை எதிர்த்துப் போராடுவதோடு உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதற்கு, தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். இப்படி செய்வதால், எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை உச்சந்தலையில் pH அளவை சமன் செய்யும். இதனால், பொடுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

வேப்பிலை மற்றும் நெல்லிக்காய்: வேப்பிலை மற்றும் நெல்லிக்காயில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் பொடுகை எதிர்த்து போராடும். தண்ணீர் அல்லது கற்றாழை ஜெல்லுடன், வேம்பு மற்றும் நெல்லி பொடியை சேர்த்து ஹேர் பேக் தயார் செய்யுங்கள். பின், இதனை முடியில் நன்கு தடவி 30 நிமிடத்திற்கு ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்வதால், பொடுகு தொல்லையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

  • இது தவிர, ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவில் கலந்து உச்சந்தலையில் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து அலசினால், பொடுகு ஏற்படுவதை தடுக்கலாம்.
  • பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலையில் தடவி, அரை மணி நேரம் பின் தலை மற்றும் கூந்தலை அலசி வந்தால் பொடுகை குறைந்து முடி ஆரோக்கியமாக வளரும்.

இதையும் படிங்க: முடி வறட்சிக்கு முழு தீர்வு! அழகான, மிருதுவான கூந்தல் வேண்டுமா?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.