ETV Bharat / lifestyle

வீட்டிலேயே டேஸ்டியான 'Brownie' எப்படி செய்வது என பார்ப்போமா? சரியான அளவீடுகள் இதோ! - FUDGY BROWNIE RECIPE IN TAMIL

அடுத்தடுத்து பண்டிகை வரும் நிலையில், சூப்பர் சுவையாக இருக்கும் பிரவுனியை (Brownie) வீட்டிலேயே எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 30, 2024, 2:19 PM IST

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து கொண்டாட்ட தினங்கள் வரிசையில் இருக்கும் நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பிரவுனியை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. இந்த முறை, வீட்டிலேயே டேஸ்டியான பிரவுனி செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • டார்க் சாக்லேட் - 150 கிராம்
  • உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம்
  • முட்டை - 3
  • சர்க்கரை - 1 1/2 கப் (300 கிராம்)
  • எண்ணெய் - 1/4 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
  • மைதா மாவு - 1 கப் (125 கிராம்)
  • கோகோ பவுடர் - 1/2 கப் (40 கிராம்)
  • உப்பு - 2 சிட்டிகை
  • சாக்கோ சிப்ஸ்/ நட்ஸ் - 50 கிராம்

Brownie செய்முறை:

  • முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து மிதமான சூட்டில் வெண்ணெய்யை உருக்கவும். பின், சூடான வெண்ணெய்யை கிண்ணத்தில் எடுத்து வைத்துள்ள டார்க் சாக்லேட் மீது ஊற்றி கை விடாமல் கரைத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது, பிரவுனி செய்வதற்கு மாவு தயார் செய்யலாம்..அதற்கு, ஒரு அகல பாத்திரத்தில் முட்டையை சேர்த்து 1 நிமிடத்திற்கு கைவிடாமல் பீட் செய்யுங்கள்.
  • பின்னர், சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்களுக்கு பீட் செய்யவும். அடுத்ததாக, நாம் உருக்கி வைத்துள்ள சாக்லேட், எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
  • அதன் பின்னர், சல்லடையில் மைதா, கோகோ பவுடர், உப்பு சேர்த்து சலித்து, நாம் கலந்து வைத்த கலவையில் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும். பின், சாக்கோ சிப்ஸ் அல்லது நட்ஸ் சேர்த்து கலந்துக்கொள்ளுங்கள்.
  • பின்பு, கேக் அச்சில் பட்டர் பேப்ரை வைத்து, அதில் நாம் தயார் செய்து வைத்த மாவை ஊற்றி சமன் செய்யவும். விருப்பப்பட்டால், மாவு மேல் பொடியாக நறுக்கிய பாதாம் போன்ற நட்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இப்போது, ஓவனை 180 டிகிரியில் பீரி கீட் செய்து மாவை வைத்து 180 டிகிரியில் 27 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் யெம்மியான பிரவ்னி ரெடி.

குறிப்பு:

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதன் மீது மற்றொரு பாத்திரத்தை வைத்து வெண்ணெய் மற்றும் சாக்லேட்டை உருக்கலாம்.
  2. மைதா மாவு வேண்டாம் என நினைப்பவர்கள், கோதுமை மாவு சேர்க்கலாம். அதே போல, எண்ணெய் வேண்டாம் என நினைப்பவர்கள், முழுமையாக பட்டரில் பிரவ்னி தயார் செய்யலாம்.
  3. குக்கரில் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள், அடுப்பில் குக்கரை வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இப்போது, குக்கரில் ஒரு ஸ்டாண்டு வைத்து அதன் மீது கேக் அச்சை வைக்கவும். பின், குக்கரை விசில் இல்லாமல் மூடிவிடுங்கள். மிதமான தீயில் அரை மணி நேரம் வைத்து எடுத்தால் சாஃப்டான பிரவுனி ரெடி.

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.