ரசம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? செய்வதற்கு 10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது என்றாலும் அதன் சுவைக்கு ஒரு குறையும் இருக்காது. காய்ச்சல் முதல் அசைவ விருந்து வரை ரசத்தின் மகிமையை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இப்படி, நமக்கு பிடித்த ரசத்தை போலவே, ஆந்திராவில் செய்யப்படும் பச்சி புளுசு மிகவும் பேமஸ். ரசம் செய்ய 10 நிமிடம் என்றால், பச்சி புளுசு செய்வதற்கு 5 நிமிடங்கள் போதும்..அதை எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்...
பச்சி புளுசு செய்ய தேவையான பொருட்கள்:
- புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
- பச்சை மிளகாய் - 6
- மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- வெங்காயம் - 2
- தக்காளி-1
- காய்ந்த மிளகாய் – 4
- கறிவேப்பில்லை, கொத்தமல்லி - தேவையான அளவு
- கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பச்சி புளுசு சுவை அட்டகாசமாக இருப்பதற்கு தீயில் வாட்டிய பச்சை மிளகாய் மிகவும் அவசியம். அதனால், முதலில் பச்சை மிளகாய்யை தீயில் வாட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- பின்னர், ஒரு பாத்திரத்தில், வாட்டி வைத்துள்ள பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,தங்காளி, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும்
- இப்போது நாம் கரைத்து எடுத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்க்கவும். அதனுடன் சிறுது மஞ்சள் தூளை சேர்க்கவும்.
- இந்த கலவையை நன்றாக கையால் பிசைய வேண்டும். கைகளை பயன்படுத்தும் போது தான் பச்சி புளுசின் சுவை கூடும்.
- இப்போது, அடுப்பை ஆன் செய்து தாலிப்பு கரண்டி அல்லது ஒரு சிறிய கடாயை வைத்து சூடாக்கவும்
- அதில், எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாயை சேர்க்கவும்.
- இவை அனைத்து நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து, நாம் கலந்து வைத்திருந்த புளி தண்ணீரில் ஊற்றி உடனே மூடி விடுங்கள்.
- அவ்வளவு தான்...ஒரு நிமிடத்திற்கு பிறகு திறந்து பார்த்தால் ஈஸி மற்றும் டேஸ்டியான பச்சி புளுசு தயார்..
- உங்களுக்கு பிடிந்திருந்தால் வீட்டில் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள்..!