ETV Bharat / lifestyle

சருமம் பளபளப்புக்கு இந்த 10 விஷயம் தான் காரணம்...கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! - TIPS FOR HEALTHY SKIN

எந்த காலநிலையாக இருந்தாலும் சன்ஸ்கிரின் பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடம் பாதுகாக்கிறது. ஒளிரும் சருமத்திற்கு உதவும் டிப்ஸ்கள் என்னென்ன? என்பதை பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Feb 9, 2025, 11:16 AM IST

எப்போதும் சருமம் பளபளப்பாக மிளிர வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. ஆனால், காலநிலை மாறுபாடுகளுக்கு ஏற்ப சருமத்தின் தன்மையும் மாறுபடும். அதனை சீராக பராமரித்து ஒளிரச்செய்யும் சில பொருட்கள் பற்றி பார்போம்.

முகம் கழுவுதல்: தினமும் காலை மாலை என இருவேளை முகம் கழுவுவது புத்துணர்ச்சியை கொடுக்கும். ஆனால், முகத்தை அடிக்கடி கழுவுவதால், சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெயை நீக்கி பளபளப்பு தன்மையை குறைக்கும். காலையில் எழுந்ததும், இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை கழுவலாம். இது தவிர, வேலை நேரத்தில் சோர்வாக இருந்தால் அப்போது குளிர்ந்த நீரில் கழுவலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - pexels)

சன்ஸ்கிரின்: சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடம் இருந்தும் தோல் புற்றுநோயை தடுக்கவும் சன்ஸ்கிரீன் உதவுகிறது. அதனால், தினசரி 15 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப் (SPF) கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, சருமம் விரைவில் வயதாகும் தன்மையை கட்டுப்படுத்தும். குளிர்ச்சி தரும் பனிப்பொழிவாக இருந்தாலும், மழைக்காலமாக இருந்தாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள். கடுமையாக வெயில் காலத்தில் எஸ்.பி.எப் 50 கொண்ட சன்ஸ்கிரின் பயன்படுத்துங்கள்.

தண்ணீர்: உடலை நீரேற்றமாக வைத்தாலே சருமம் முதல் பல கொடிய பிரச்சனைகளை தடுக்கலாம் என பல ஆய்வுகள் கூறுகின்றது. அதே போல, ஆரோக்கியமான சருமத்திற்கும் தண்ணீருக்கும் வலுவான தொடர்பு உள்ளதாகவும், ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்பள் தண்ணீர் குடிப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - pexels)

கற்றாழை: சருமத்தில் புதிய உயிரணு வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கற்றாழையில் உள்ளது. இவை, சருமத்தை வலுவாக வைத்திருக்கும். மேலும், சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதமாக வைத்திருந்து, கூடுதல் பளபளப்பை கொடுக்கும். கற்றாழையை பயன்படுத்தினால் சிலருக்கும் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் கையில் தடவி பரிசோதித்து பயன்படுத்தலாம்.

சூடான நீரில் குளியல்?: வெதுவெதுப்பான நீர், சருத்துளைகளில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. ஆனால், அடிக்கடி பயன்படுத்தினால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் தன்மையை அகற்றி சோர்வாகவும் மந்தமாகவும் உணர வைக்கும். அதனால், வாரத்திற்கு ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் குளிப்பது போதுமானது என்கின்றனர்.

தேங்காய் எண்ணெய்: சிறந்த மாய்ஸ்சுரைசராகவும், சரும அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது தான் தேங்காய் எண்ணெய். முகத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடத்திற்கு பின் கழுவலாம். இந்த செயல் சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - pexels)

காய்கறி மற்றும் பழங்கள்: தினசரி பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும் வழக்கத்தை வைத்துக்கொள்வது பொலிவான சருமத்திற்கு வழிவகுக்கும். இவை, உடலின் வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகளின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும், மீன் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு ஆதரவாக இருக்கும்.

மாய்சுரைசர்: தினமும் முகத்தை கழுவிவிட்டு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இளமை தோற்றப்பொலிவை கொடுக்கும். அனைத்து காலநிலையிலும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - pexels)

புரோபயாடிக் உணவுகள்: தயிர் மற்றும் யோகார்டில் (Yogurt) உள்ள நல்ல பாக்டீரியாக்கள் சரும ஆரோக்கியத்திற்கு பலம் சேர்ப்பதோடு கூடுதல் பொலிவுக்கும் வழிவகுக்கும். சருமத்தில் தயிர் பேக் பூசியும் பொலிவு சேர்க்கலாம்.

புகைப்பழக்கம்: புகையிலைப்பொருட்கள், புகைப்பிடிப்பது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவற்றில் உள்ள ரசாயனங்கள் சரும செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கூடுதலாகம் முன்கூட்டியே வயதாகும் செயல்முறைக்கும் வித்திடும். புகைப்பிடிக்க தோன்றினால், அந்த சமயங்களில் அதற்கு மாற்றாக தண்ணீர் பருகும் பழக்க வழக்கத்தை பின்பற்றுங்கள்.

இதையும் படிங்க:

பளபளக்கும் கண்ணாடி சருமம் வேண்டுமா? இந்த விதையில் தயார் செய்யும் ஃபேஸ் பேக் அப்ளை செய்ங்க!

வயதானாலும் இளமையாக இருக்க வேண்டுமா? இதை மட்டும் பண்ணுங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.