அசைவம், சைவம் சாப்பிடுபவர்கள் என அனைவருக்கும் புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுவது பனீர் தான். ஆனால், தற்போது சந்தைகளில் கிடைக்கும் பனீர்களில் (Adulteration in paneer) கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய சோதனையில், 168 சீஸ் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் 47 மாசுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மும்பை-டெல்லி விரைவுச் சாலையில் 1,300 கிலோ போலி பனீர் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. வீட்டில் பனீரால் செய்யப்படும் விதவிதமான உணவுகளை சமைத்து விரும்பி உண்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். ஆனால், நம்பிக்கையுடன் கடைகளில் வாங்கும் பனீர்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா அல்லது உண்மையானதா என்பதை எப்படி புரிந்துகொள்வது? இதுபோன்ற சூழ்நிலையில், சில டிப்ஸ்களை பின்பற்றுவதால் போலி பனீரை கண்டறியலாம்..
கலப்படம் செய்யப்பட்ட பனீரை கண்டறிவது எப்படி?:
பிரஷர் டெஸ்ட் :பனீரை ஒரு தட்டில் வைத்து, மிக லேசான அழுத்தத்துடன் உங்கள் உள்ளங்கையை வைத்து நசுக்க முயற்சிக்கவும். அப்போது பனீர் பிரிந்து வந்தால் அல்லது உடைந்தால், அதில் கலப்படம் இல்லை என்று அர்த்தம். இல்லாவிட்டால் அதில் கலப்படம் செய்யப்பட்டதற்கு வாயுப்பு உள்ளது. உண்மையில், போலி பனீரில் காணப்படும் பொருட்கள் பாலின் குணங்களை அழித்து கடினமாக்குகின்றன.
அயோடின் சோதனை: பனீரை சிறிதளவு எடுத்து தண்ணீரில் சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து ஒரு தட்டில் வைக்கவும். ஆறிய பிறகு மேலே சில துளிகள் அயோடின் சேர்க்கவும். இப்போது பனீரின் நிறம் நீலமாக மாறினால், பாலில் செயற்கைப் பொருட்களைச் சேர்த்து பனீர் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.