வாஷிங்டன்:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை (நேற்று) தொடங்கியது. அப்போது, அதானி லஞ்ச ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த கோரியும், அவைத் தலைவர்கள் கோரிக்கைகளை நிராகரித்ததாலும், அவை கூடிய ஒரு மணி நேரத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளதாக அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உட்பட ஏழு பேர் மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அவை தொடங்கியதும் அதானி மீதான லஞ்ச ஊழல் குற்றசாட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டனர். மேலும், அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோஷமிட்டார். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்படவே எதிர்க்கட்சி எம்பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்றைய தினம் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க:உயிர் போராட்டத்துக்கு மத்தியில் உணவு போராட்டம்.. 44,056 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்-ஹமாஸ் போர்!