கொழும்பு / இலங்கை:செப்டம்பர் மாதம் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) அனுரகுமார திசாநாயக்க வென்று, இலங்கை அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்றத்தில் 3 எம்பிக்கள் மட்டுமே கொண்டிருந்தது.
இதனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டிய நெருக்கடிக்கு அனுரகுமார தள்ளப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தல் நேற்று (நவம்பர் 14) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இந்த தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி இன்று (நவம்பர் 15) தொடங்கிய நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாக உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனையடுத்து மாவட்டங்களின் தேர்தல் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 6 மணி நிலவரப்படி என்.பி.பி தேசிய அளவில் 62 சதவீதம், அதாவது 4.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும் NPP கட்சி எண்ணப்பட்ட 196 இடங்களில் 35 இடங்களில் உறுதியாக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:சோதனைக் கூடத்திலிருந்து தப்பிய குரங்குகள்! பொதுமக்கள் அச்சம்
இது குறித்து பேசிய அரசியல் ஆய்வாளர்கள், “செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு பின் இலங்கை வரலாறு காணாத பொருளாதார சவால்களை சந்தித்துள்ளது. இந்த சவால்களை அனுரகுமார திசாநாயக்க நல்முறையில் கையாண்டுள்ளாரா? இல்லையா? என்பது இந்த தேர்தல் முடிகளில்தான் தெரியும்.
முன்னாள் அதிபரின் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்பு திட்டத்தின் தாக்கத்தையும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் என மிக பெரிய சவாலான சூழலை தற்போதைய அதிபர் எதிர்கொண்டுள்ளார். அதனால் நடந்து முடிந்த அதிபர் தேர்தலை விட இந்த நாடாளுமன்ற தேர்தலில் NPP கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகளவில் கிடைக்கலாம். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் NPP கட்சிக்கு 150 இடங்கள் அல்லது அறுதிப் பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளது,” என்றனர்.
தற்போதைய நிலவரபடி பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) கட்சி மற்றும் தேசிய ஜனநாயக முன்னணி (NDF) முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவுடன் தலா 5 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளனர்.
இதில் எஸ்.ஜே.பி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ராஜபக்சே குடும்பத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி எஸ்.எல்.பி.பி (SLPP) 2 இடங்களில் வெற்றி பெற்று வாக்குகள் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் அதன் ஆதரவு பெறும் என்.டி.பி (NDP) ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்