சியோல் :தென் கொரிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி 175 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தென் கொரியா நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 300 தேசிய சட்டப்பேரவைக்கான தொகுதிகளில் ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஆளும் மக்கள் சக்தி கட்சி பல்வேறு இடங்களில் படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 175 இடங்களை கைப்பற்றி அருதி பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.
அதேநேரம், ஆளும் மக்கள் சக்தி கட்சி கூட்டணி வெறும் 109 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றொறு எதிர்க்கட்சி 12 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் முழு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு அதிபராக மக்கள் சக்தி கட்சியின் யூன் சுக் இயோல் பதவியேற்றுக் கொண்டார்.
அவரது பதவிக் காலம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், தேசிய சட்டப்பேரவையை எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகம் கைப்பற்றி இருப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அவரது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அவர் நாட வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கடுமையான பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க அவர் கடுமையாக அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் உள்நாட்டில் விலைவாசி உயர்வு, உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது உள்ளிட்ட காரணங்களால் அவரது செல்வாக்கு மக்களிடையே குறைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் பிரதிபலிப்பே தேர்தல் தோல்விக்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இன்னும் சில இடங்களில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில், முழு முடிவுகளும் விரைவில் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :ஐபோன்கள் பயனர்களே உஷார்..! ஆப்பிள் போன்களில் ஸ்பைவவேர் தாக்குதல்! ஆப்பிள் எச்சரிக்கை! - Apple Alert Users To Spyware Attack