ஜம்மு காஷ்மீர் : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லை பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் புகுந்து நாசவேளைகளில் ஈடுபட தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அதேநேரம் இரவு பகலாக எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதிதிட்டங்களை தவிடு பொடியாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே சட்ட விரோதமாக டெலிகாம் டவர்களை பாகிஸ்தான் அமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத ஊடுருவல்கள் அதிகரிக்க வழிவகுக்க உதவும் வகையில் அதீத தொழில்திறன் கொண்ட டவர்கள் அண்மைக்காலமாக நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்மைக்காலமாக தீவிரவாத அமைப்புகள் அதிக தொழில்திறன் மற்றும் பாதுகாப்பு தன்மை மிக்க YSMS சேவைகளை பயன்படுத்தி வருவதாக ராணுவம் தரப்பி தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஜோரி, பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி ஊடுருவல்களில் ஈடுபடும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் இந்த YSMS குறுந்தகவல் பகிர்வு சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.