தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிங்கப்பூரில் அதிக சம்பளத்துடன் வேலை.. இனி ஏமாற்றத்திற்கு இடமில்லை.. வருகிறது செக்கிங் வெப்! - tool to verify public document

Singapore public document Verifier: சிங்கப்பூர் அகாடமி ஆஃப் லா (Singapore Academy of Law) மற்றும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) இணைந்து சிங்கப்பூர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொது ஆவணத்தை சரிபார்க்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

வேலைவாய்ப்பு தொடர்பான கோப்புப்படம்
வேலைவாய்ப்பு தொடர்பான கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 9:49 PM IST

Updated : Sep 15, 2024, 2:49 PM IST

ஹைதராபாத்:இந்தியாவில் பெரும்பாலானோரின் கனவு வெளிநாடுகளில் பணிபுரிய வேண்டும் என்பதாக உள்ளது. ஆனால், அதற்கான சரியான வழிமுறைகள் மற்றும் நம்பகத்தன்மையுடன் கூடிய நிறுவனங்களோ அல்லது மத்தியஸ்தர் அணுகும் வழி கிடைக்காமல் நம்மிள் பலர் போலியான வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தி ஏமாந்து நிற்கும் சூழல் ஆங்காங்கு அரங்கேறி வருவதை காண முடியும். ஆனால், இது போன்ற அசம்பாவிதத்தை தடுக்கும் நோக்கில், சிங்கப்பூர் அரசாங்கம் புதியதோர் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதம் மூலம் இணையதளத்தை வழையாகவோ அல்லது நேரடியாகவோ 2025ஆம் முதல் சிங்கப்பூர் அரசு வழங்கிய ஆவணத்தை சரிப்பார்த்து கொள்ள முடியும்.

இதன்படி, சிங்கப்பூர் அகாடமி ஆஃப் லா (Singapore Academy of Law) மற்றும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) இணைந்து, 2025ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு வேலைகாக செல்பவர்கள் அல்லது சிங்கப்பூர் வாசிகள் சிங்கப்பூர் அரசு சார்பாக வழங்கப்படும் விசா போன்ற ஆவணங்களையும் தாங்கள் அணுகி இருக்கும் நிறுவனத்தின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளும்படி ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

சிங்கப்பூர் அகாடமி ஆஃப் லா வெளியிட்டுள்ள அறிக்கை (Credits- ETV Bharat Tamil Nadu)

இதன் மூலம் தாங்கள் செல்லவிருக்கும் நிறுவனம் குறித்த தகவலை அறிந்து, பொது ஆவணங்களை பகிர்ந்து கொள்ளலாம். இந்த இணையதள சேவை சிறு நேரத்தில் கிடைக்கும் வகையில் அமைப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் நோக்கமானது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தாங்கள் கையெழுத்திட்ட ஆவணத்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.

இதையும் படிங்க:சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணும் AI: வழக்கறிஞர்களை தயார்ப்படுத்தும் சிங்கப்பூர்!

இணையத்தில் அணுகி சரிபாருங்கள்:மக்கள் இந்த சேவையை இணையத்தில் பெற SAL Legalization Portal (www.legalisation.sal.sq) என்ற தளத்தில், தாங்கள் வழங்க வேண்டிய ஆவணங்களை டிஜிட்டல் மூலமாக பதிவிறக்கம் செய்து, ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்க்கலாம். நீங்கள் பதிவிறக்கம் செய்த சில நிமிடங்களில் டிஜிட்டல் சான்றிதழான இ-அப்போஸ்டில் (e-Apostille) உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். இதற்கான கட்டணமாக ஒரு ஆவணத்திற்கு 10.70 டாலர், இந்திய மதிப்புபடி ரூ.691.22 செலுத்தி உடனடி சேவையைப் பெறலாம்.

சிங்கப்பூர் அகாடமி ஆஃப் லா வெளியிட்டுள்ள அறிக்கை (Credits- ETV Bharat Tamil Nadu)

சரிபார்க்கும் முறைகள்:இந்த இணையதளம் நீங்கள் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை முதல் கட்டமாக கணக்கியல் மற்றும் கார்ப்பரேட் ஒழுங்குமுறை ஆணையம் (ACRA) மூலம் வணிக விவரங்கள் (BP) மற்றும் வணிகச் சான்றிதழ்கள் (BC) (இணைப்பு/பதிவு) போன்றவற்றை சரிபார்க்கும். இதன் மூலம் நீங்கள் அணுகி இருக்கும் நிறுவனம் நம்பகத்தன்மையானதா என சரிபார்க்கும். இந்த சரிபார்ப்பிற்கு பின் நற்சான்றிதழ்கள் (VC) வழங்கப்படும். இந்த நற்சான்றிதழ் விவரக்குறிப்புடன் இணைய World Wide Web Consortium’s W3C உதவிகரமாக இருக்கிறது.

மேலும், இந்த விவரக்குறிப்பைக் கடைப்பிடிப்பதன் மூலம், சிங்கப்பூரில் வேலை தேடி ஒரு நிறுவனத்தை அணுகுபவர்கள் மட்டுமின்றி, உலக அளவில் சிங்கப்பூர் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் நல்வாய்ப்பை அமைத்து தரக்கூடியது என சிங்கப்பூர் அகாடமி ஆஃப் லா தலைமை நிர்வாகி யோங் சீ கின் தெரிவித்துள்ளார்.

Last Updated : Sep 15, 2024, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details