சியோல் (தென்கொரியா):தென்கொரியாவில் விமானம் தரையிறங்கியபோது தீப்பற்றிய கோர விபத்தில் பயணிகள் 62 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் என மொத்த 181 பேருடன், தென்கொரியாவின் ஜிஜு நிறுவன பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை தென்கொரியா நோக்கி வந்து கொண்டிருந்தது.
தலைநகர் சியோலில் இருந்து 288 கிலோமீட்டர் தொலைவில், தென்மேற்கு திசையில் அமைந்துள்ள முசான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று பக்கவாட்டு தடுப்பில் வேகமாக மோதியதில் விமானம் தீப்பற்றி எரிந்தது.
தென்கொரிய நேரப்படி இன்று காலை 9:07 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது விமானத்தில் பயணித்த 181 பேரில் இரண்டு பேரை தவிர, மொத்தம் 179 பேர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
விமானம் தரையிறங்கியபோது பறவை எதிர்பட்டதும், மோசமான வானிலையும் விமான விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.