தாவோ: தாவோ அடுத்த மலைப்பிரதேச டவுனான மோங்காயோவில் திடீரென நிலச் சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. மண் சரிவுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
இருப்பினும், தொடர் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொடர் நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் கடந்த சில நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தாவோ பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகள் தனித் தீவுகள் போல் மாறி காட்சி அளிக்கின்றன. பிலிப்பைன்ஸ் அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படும் நாடாகக் காணப்படுகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டும் பிலிப்பைன்ஸை நாட்டை 20 சூறாவளி மற்றும் புயல்கள் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஹையான் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளிக் காற்றால் 7 ஆயிரத்து 300 பேர் வரை காணாமல் மற்றும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :அமெரிக்க அதிபர் தேர்தல்! இந்திய வம்சாவெளி விவேக் ராமசாமி திடீர் விலகல்! இதுதான் காரணமா?