டெல் அவிவ் : ஹாமாஸ் படை நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் 21 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் நடத்திய கோரத்தாக்குதலை அடுத்து, காசா மீதான பதில் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. ஏறத்தாழ 6 மாதமாக இர தரப்பிலும் கடுமையான போர் நடந்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், காசா பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் 21 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை ஹாமாஸ் கிளர்சிக் குழு வீசியதில், அது இரண்டு கட்டடங்கள் மீது மோதி சரிந்து விழுந்ததாகவும் இந்த விபத்தில் கட்டத்தின் அருகில் இருந்த 21 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.