தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இவ்விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பின்னர், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டன. இதையடுத்து, ஈரான் நாட்டின் அரசியல் சாசனத்தின் படி, புதிய அதிபராக முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமிய நாடான ஈரான் நாட்டின் அதிபராக இருந்தவர், இப்ராஹிம் ரைசி. இந்நிலையில், நேற்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு - Iran President Ebrahim Raisi Died