தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சென்னை - யாழ்ப்பாணம் (பலாலி) இடையேயான விமான சேவையை தொடங்கிய இண்டிகோ - indigo airlines - INDIGO AIRLINES

சென்னை - யாழ்ப்பாணம் பலாலிக்கு இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று முதல் (செப்.01) முதல் தொடங்கியது.

யாழ்ப்பாணம் விமான நிலையம்
யாழ்ப்பாணம் விமான நிலையம் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 10:16 AM IST

சென்னை:இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு , அண்மையில் அறிவித்து இருந்தது. மேலும் இந்த திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

விமான சேவை ஆரம்பம் (Credits - ETV Bharat)

இந்தநிலையில் சென்னைக்கும் யாழ்ப்பாணம் (பலாலி) இடையே இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் துவங்கியுள்ளது. தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை இந்தியாவின் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் (Alliance Air) நடத்தி வருகிறது. மேலும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் நேற்று பிற்பகல் 3.07 மணியளவில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது. முதல் முறையாக யாழ்பாணம் வந்தடைந்த விமானத்தை வரவேற்கும் விதமாக வாட்டர் சல்யூட் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் போது இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த பயணிகள் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி, வரவேற்பு நடனம், நினைவுப் பரிசுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால், கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் குறுகிய நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடிவதாக விமானத்தில் பயணம் செய்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்கள்:சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்த ஃபார்முலா 4 கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details