பெய்ரூட்:இஸ்ரேல் உடனான போரில் வெற்றி பெற்று விட்டதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே மோதல் தொடங்கி பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பின்னர் முதன்முறையாக ஹிஸ்புல்லா இதனை அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் 27ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 4 மணிக்கு தொடங்கியது. போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது ஆரம்ப கட்டத்தில் இரண்டு மாதகாலம் அமலில் இருக்கும். ஒப்பந்தத்தின் படி லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் விலகிக் கொள்ள வேண்டும். அதே போல இஸ்ரேல் படையினரும் தங்கள் நாட்டு எல்லைக்கு திரும்புவார்கள். ஆயிரகணக்கான லெபனான் படைகள், ஐநா அமைதிபடை வீரர்கள் லெபனானின் தெற்கு பகுதியில் நிறுத்தப்படுவார்கள்.போர் நிறுத்தம் அமலில் உள்ளதா? என்பதை அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு கண்காணித்து வருகிறது.
லெபனானில் கடந்த 13 மாதத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3760 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2000த்துக்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இயக்கத்தினரை கொன்றிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. லெபனானின் மீது நடைபெற்ற தாக்குதல் காரணமாக 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதையும் படிங்க:திரெளபதி முர்மு தமிழக பயணம்: உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை!