தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விதிமீறல்களுககு இடையே தொடர்ந்து நீடிக்கும் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்! - ISRAEL HEZBOLLAH TRUCE

தெற்கு லெபனானில் 12க்கும் மேற்பட்ட நகரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேல் படைகள் இரண்டு நகரங்களில் இருந்து மட்டுமே வெளியேறி உள்ளன. ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

லெபனான் காபந்து பிரதமர் நஜிப் மிகாட்டி, லெபனான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் குழுவை லெபனானின் பெய்ரூட்டில் உள்ள அரசு மாளிகையில் சந்தித்தார்(கோப்புப்படம்).
லெபனான் காபந்து பிரதமர் நஜிப் மிகாட்டி, லெபனான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் குழுவை லெபனானின் பெய்ரூட்டில் உள்ள அரசு மாளிகையில் சந்தித்தார்(கோப்புப்படம்). (Image credits-AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 6:59 PM IST

பெய்ரூட்:இஸ்ரேல்-லெபனான் தீவிரவாத குழுவான ஹிஸ்புல்லா இடையே ஒரு மாதத்துக்கு முன்பு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்புக்கொள்ளப்பட்ட படி காலக்கெடுவுக்குள் படைகள் வாபஸ் பெறப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே கடந்த நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தெற்கு லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் உடனடியாக ஆயுதங்களை களைந்து விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் தெற்கு லெபானில் இருந்து 60 நாட்கள் இஸ்ரேல் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அதன் பின்னர் லெபனான் ராணுவம், ஐநா அமைதி படைகள் வசம் தெற்கு லெபனான் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததில் இருந்து தெற்கு லெபனானில் இஸ்ரேல் இதுவரை 2 நகரங்களில் இருந்து மட்டுமே படைகளை வாபஸ் பெற்றுள்ளது. ஹிஸ்புல்லா நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது. அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுவதற்கு முன்பு ராக்கெட்டுகளை ஏவவும் ஆயுதங்களை நகர்த்தவும் முயற்சிப்பதாக அது குற்றம் சாட்டுகிறது. 14 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்த போர் காரணமாக ஹிஸ்புல்லா படைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எனினும் 60 நாட்கள் காலக்கெடுவுக்குள் இஸ்ரேல் முழுமையாக படைகளை விலக்கிக் கொள்ளாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட போர் விதிமுறைமீறல்கள் நேரிட்டிருப்பதாக இருதரப்பு சார்பாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. எனினும் கூட இன்னும் போர்நிறுத்தம் தொடர்கிறது. இதனால் போரினால் இடம் பெயர்ந்துள்ளவர்கள் வீடு திரும்புவதற்காக இன்னும் ஏராளமானோர் காத்திருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் தெளிவற்ற நிலையிலும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது என வாஷிங்டன்னில் உள்ள மத்திய கிழக்கு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஃபிராஸ் மாக்சாத் கூறுகிறார். "இந்த நெகிழ்வு தன்மை காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட சில நாட்களிலேயே சிரியாவின் நீண்டகால தலைவர் பாஷார் ஆசாத் விலகுவது போன்ற மாறிவரும் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கலாம்,"என்று கூறுகிறார்.பாஷார் ஆசாத் விலகுவதன் மூலம் ஈரானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஆயுதங்களை கடத்தி வரும் முக்கியமான பாதையை இழக்க நேரிட்டது. இது ஹிஸ்புல்லாவின் நிலையை மேலும் பலவீனப்படுத்தியது.

ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். அதற்கு அடுத்த நாள் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தினர். அது முதல் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் 4000த்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 10 லட்சம் லெபனான் மக்கள் வீடுகளை விட்டு குடிபெயர்ந்துள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இரண்டு தரப்புமே உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் தற்காத்துக் கொள்ள பதில் தாக்குதல் நடத்தலாம் என்று கூறுகிறது. ஹிஸ்புல்லா அல்லது வேறு எந்த இயக்கமும் லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்துவதை லெபனான் ராணுவம் தடுத்து வருகிறது. தெற்கு லெபான் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை களைய வேண்டியது உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல், லெபனான், ஐநா அமைதிப்படை ஆகியவைதான் போர் நிறுத்தத்தை ஒப்பந்தம் அமல்படுத்துவதை கண்காணிப்பவையாகும்.

போர் நிறுத்தம் அமலில் உள்ளதா?

பெரும்பாலான இடங்களில் தங்களுடைய ராக்கெட், ட்ரோன்கள் இயக்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக ஹிஸ்புல்லா சொல்கிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் பெரும்பாலும் தாக்குதல் நடத்துவதில்லை. எனினும் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிலைகள் மீது வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.இதனிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததில் இருந்து தரை வழியாகவும், வான்வழியாகவும் 816 தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் லெபனான் புகாரளித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details