சான் பிரான்சிஸ்கோ: யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சூசன் வோஜ்சிக்கி (56) இன்று (ஆக.10) புற்றுநோயால் காலமானார். இவர் கடந்த 2014 -2023 வரை யூடியூப் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக (CEO) பணியாற்றினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகினார். கூகுள் நிறுவனத்தை கட்டமைப்பதில் மிக முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில், கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எனது அன்புத் தோழி சூசன் வோஜ்சிக்கி இழப்பை நம்ப முடியாமல் வருத்தத்தில் இருக்கிறேன். கூகுள் வரலாற்றில் அவள் ஒரு முக்கிய பெண்ணாக கருதப்படுகிறார். அவர் இல்லாத உலகத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.