தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்..வீடுகள், அலுவலங்களில் இருந்தவர்களின் நிலை என்ன? - Afghanistan Earthquake today

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 11:30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம் (Image Credits - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 1:12 PM IST

காபூல் (ஆப்கானிஸ்தான்): இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அண்மைகாலமாக அவ்வபோது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 16 ஆம் தேதி, இந்திய நேரப்படி மாலை 6:35 மணியளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.

இந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 11:36 மணியளவில் ஆப்கானிஸ்தானி மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் காபூலை மையமாக கொண்டு, 255 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 6 புள்ளிகள் அளவுக்கு ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக, வீடுகள், அலுவலக கட்டடங்கள் சேதம் அடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஆயினும், உயிரிழப்புகள் தொடர்பாக முதல்கட்ட தகவல்கள் ஏதுமில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வங்கதேச வெள்ளப்பெருக்கிற்கு இந்தியா காரணமா? மாணவர்கள் குற்றச்சாட்டுக்கு வெளியுறவு அமைச்சகம் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details