வாஷிங்டன்:அமெரிக்காவைச் சேர்ந்த கணினி தகவல் அமைப்பு (Computer information System) பயிலும் மாணவி துருவி படேல், இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படும் 'உலகளாவிய மிஸ் இந்தியா 2024' போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு வெளியே மிக நீண்ட காலமாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற துருவி படேல், தான் பாலிவுட் நடிகையாகவும், யுனிசெஃப் தூதராகவும் வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள எடிசன் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் அவர் மேலும் கூறுகையில், "உலக அளவில் 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்றது ஒரு நம்ப முடியாத கவுரவம். இது மகுடத்தை விட மேலானது. எனது பாரம்பரியம், எனது மதிப்புகள் மற்றும் உலக அளவில் மற்றவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பை இந்த வெற்றி குறிக்கிறது" என்றார்.
இப்பிரிவில் சுரினாமைச் (தென் அமெரிக்கா) சேர்ந்த லிசா அப்டோல்ஹாக் இரண்டாம் இடமும், நெதர்லாந்தைச் சேர்ந்த மாளவிகா ஷர்மா மூன்றாவது இடமும் பிடித்தனர்.