பொகோடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா ரோராவில் உள்ள ராணுவ முகாமில் இருக்கும் வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டன. பொருட்களை இறக்கிவிட்டு புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 9 ராணுவ வீரர்களும் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்ததாகவும், பின்னர் சாண்டா ரோசா அருகே கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்ததாகவும் ராணுவம் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கொலம்பியா குடியரசுத் தலைவர் குஸ்டாவோ பெட்ரோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.