நியூயார்க்:வங்கதேசத்தில் நிகழ்ந்து வரும் இந்துக்கள் இனப்படுகொலையை தடுக்க உலக அளவில் தீவிர வேண்டுகோள் விடுக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள இந்து குழுவினர், நியூயார்க் வான் பரப்பில் ஒரு பெரிய பதாகையை பறக்கவிட்டனர்.
இந்த பதாகையானது ஹட்சன் ஆற்றின் மீது பறக்கவிடப்பட்டது. மேலும், மனித கண்ணியம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் உலகளாவிய அடையாளமான சுதந்திர தேவி சிலையையும் சுற்றி வந்தது. கடந்த 2022-ல் அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம் 'எச்ஆர் 1430'-ல் ஆவணப்படுத்தப்பட்ட படி, 1971ம் ஆண்டு இனப்படுகொலையில் 2.8 மில்லியன் (28 லட்சம்) மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், குறைந்தது 2 லட்சம் பெண்கள், பெரும்பாலும் இந்துப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிடுகிறது.
வங்கதேசத்தின் இந்து மக்கள் தொகை கடந்த 1971-ல் 20 சதவீதமாக இருந்த நிலையில், இனப் படுகொலைக்குப் பிறகு, தற்போது வெறும் 8.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. திட்டமிட்ட வன்முறை, வறுமை, கொலைகள், மைனர் பெண்களை கடத்துதல், 2 லட்சம் இந்துக்கள் கட்டாய வேலை நீக்கம் மற்றும் சொத்து பறிமுதல் என, அந்நாட்டில் வாழும் 13 முதல் 15 மில்லியன் இந்துக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து சுமார் 250 உறுதிப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நியூயார்க்கில் கவன ஈர்ப்பு பதாகை பறக்கவிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வங்கதேச இந்து சமூகத்தைச் சேர்ந்த சிடாங்ஷு குஹா, இந்த அச்சுறுத்தல் குறித்து கூறுகையில், "வங்கதேசத்தில் இந்துக்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். கவன ஈர்ப்பு பதாகை முயற்சி, உலக அரங்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வங்கதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஐ.நா நடவடிக்கை எடுக்கவும் உதவும்.
இதையும் படிங்க:ஈரான் Vs இஸ்ரேல் மோதல்! பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?