தாகா:வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் கோர உள்ளதாக அந்த நாட்டின் தலைமை ஆலோசகர் முமகது யூனூஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு பதவி விலக்கோரி கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அந்நாட்டில் மாணவர்கள் உள்ளிட்டோர் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 1500 பேர் கொல்லப்பட்டனர். 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பிரமதமர் பதவியில் இருந்து விலகினார். நாட்டை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தலைமை ஆலோசகர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. இடைக்கால அரசு பதவி ஏற்று 100 நாட்கள் கடந்ததையடுத்து அந்நாட்டின் அரசு செய்தி முகமைக்கு பேட்டியளித்துள்ள அந்நாட்டின் தலைமை அரசியல் ஆலோசகர் முகமது யூனூஸ், "இந்து சிறுபான்மையினர் உட்பட தேசத்தில் உள்ள அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைப்பதையும் உறுதி செய்வோம். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பும் படி இந்தியாவிடம் கோரிக்கை விடுப்போம்.