கொழும்பு: இலங்கையின் 9-வது அதிபராக அனுரகுமார திசநாயக இன்று பதவியேற்றார். 56 வயதான திசநாயகவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தலைவரான அனுரா குமார திசநாயக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனது நெருங்கிய போட்டியாளரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான சமகி ஜன பலவேகயா கட்சியின் (எஸ்ஜேபி) சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார்.
இத்தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அனுரா குமார திசநாயத, சஜித் பிரேமதசா மற்றும் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவரிடையே பலத்த போட்டி நிலவியது. எனினும் வாக்கு எண்ணிக்கையில் ரணில் விக்கிரமசிங் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், வெற்றிக்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் யாருக்கும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க:ஈரானில் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 30 பேர் உயிரிழப்பு!